உரையை தேர்வு (SELECT) செய்ய குறுக்கு வழிகள்
ஒரு எழுத்தையோ அல்லது அதற்க்கு மேலோ தேர்வு செய்ய அந்த
எழுத்துக்களின் மீது மவுசின் இடது button ஐ அழுத்திக்கொண்டு இழுக்கவும்.
ஒரு சொல்லை தேர்ந்தெடுக்க அந்த சொல்லின்மீது இரு தடவை
சொடுக்கவும்.
ஒரு பத்தியை
தேர்ந்தெடுக்க அந்த பத்தியில் உள்ள ஏதாவது ஒரு சொல்லின்மீது இரு தடவை
சொடுக்கலாம் அல்லது இடது பக்க margin ல் இரண்டு தடவை சொடுக்கவும்.
உரையில் திரையில் தெரியும் ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்க
SHIFT ஐ அழுத்திக்கொண்டு PAGEDN ஐ அழுத்தவும்.
ஒரு வரியை தேர்ந்தெடுக்க அந்த வரியில் இடது பக்க margin
செல்லவும். இப்போது உங்கள் கர்சர் வலது பக்கம் திரும்பிய அம்புக் குறியாக
தோன்றும். மவுசின் இடது button ஐ சொடுக்கவும்.
ஒரு வரிக்கு மேல் தேர்ந்தெடுக்க இடது பக்க margin ல் அத்தனை
வரிகளையும் தேர்ந்தெடுத்து
சொடுக்கவேண்டும்.
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து அந்த வரியின் கடைசி வரை
தேர்ந்தெடுக்க SHIFT ஐ அழுத்திக்கொண்டு END ஐ அழுத்தவும்.
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து அந்த வரியின் ஆரம்பம் வரை
தேர்ந்தெடுக்க SHIFT ஐ அழுத்திக்கொண்டு HOME ஐ அழுத்தவும்.
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து அந்த கோப்பின் ஆரம்பம் வரை தேர்ந்தெடுக்க SHIFT CTRL
இரண்டையும் ஒரு சேர அழுத்திக்கொண்டு HOME ஐ அழுத்தவும்.
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து அந்த கோப்பின் கடைசி வரை தேர்ந்தெடுக்க SHIFT CTRL இரண்டையும்
ஒரு சேர அழுத்திக்கொண்டு END ஐ அழுத்தவும்.
கோப்பு முழுவதையும் தேர்ந்தெடுக்க
- Ø Ctrl + A அல்லது
- Ø கோப்பின் இடது பக்க margin-ல் Ctrl + Click அல்லது
- Ø கோப்பின் இடது பக்க margin-ல் மூன்று முறை சொடுக்குதல்
உரையை எவ்வளவு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரியாதபோது,
ஆரம்பிக்கும் இடத்தில SHIFT ஐ அழுத்திக்கொண்டு சொடுக்கவும். எங்கு முடிய வேண்டுமோ அங்கும் SHIFT ஐ அழுத்திக்கொண்டு சொடுக்கவும்.
அல்லது
ஆரம்பிக்கும் இடத்தில F8 என்ற button-ஐ அழுத்தவும்,
முடியும் இடத்தில சொடுக்கவும்.
விட்டு விட்டு சொற்களையோ, வரிகளையோ தேர்வு செய்யவேண்டியிருந்தால்
தேவையான இடங்களில் Ctrl ஐ அழுத்திக்கொண்டு
தேர்வு செய்யவும்.
நெடுவாக்கில் தேர்வு செய்ய ALT button-ஐ அழுத்திக்கொண்டு தேர்வு செய்யவும்.
No comments:
Post a Comment