Total Pageviews

Friday, 14 April 2017

 வணக்கம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
     தற்போது அரசு அலுவலகங்களில் கணிப்பொறியின் உபயோகத்தை பலர் உணர்ந்து வருவதால் அதனை  உபயோகிப்பது கொஞ்சம் அதிகமாகி வருகிறது.  நம்மில் பலபேர் கணிப்பொறியை பற்றியும், அதை பயன்படுத்தும் விதத்தை பற்றியும் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாகவே உள்ளோம்.  ஆனால் அதை எப்படி, எங்கே போய் தெரிந்து கொள்வது என்பதுதான் தெரியவில்லை. கொஞ்சம் தெரிந்து கொண்டவர்களுக்கு அதை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பது தெரியவில்லை. கணிப்பொறியை பற்றி சொல்லிக் கொடுக்கும்  வணிக நிறுவனங்களுக்கு சென்றால் நமக்கு தேவையான பல விஷயங்கள் சொல்லிகொடுக்கப் படுவதில்லை. காரணம் அதன் உபயோகத்தை பற்றி அவர்களுக்கே சரியாக தெரியாது.

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். கணிப்பொறி கற்றலை நாம் தற்போதைக்கு கிழ்கண்ட பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
அ.  அடிப்படையை தெரிந்துகொள்ளல்.
ஆ.  Operating System (இயங்கு பொருள்) பற்றி தெரிந்துகொள்ளல்.
இ.   நாம் அடிக்கடி பயன்படுத்தும் M.S.Office Word, M.S.Office Excel,
     M.S. Office Power Point, M.S. Office Access முதலியவைகளைப் பற்றி
     தெரிந்துகொள்ளல்.
உ.   Internet and Email பற்றி தெரிந்துகொள்ளல்.
ஊ.   மற்றவைகள்.

தெரிந்து கொள்வது என்பது மேற்கண்ட வரிசையில் இருந்தாலும் நான் எழுதப்போவது இந்த வரிசையில் அமையாது.  எனது எண்ண ஓட்டத்தை அடிப்படையாகக்கொண்டு எப்போது எதைப்பற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ அதைப்பற்றி அவ்வப்போது எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

                     --------------------

3 comments: