Total Pageviews

Sunday, 16 April 2017

MS WORD - WATERMARK

WATERMARK  நீர்க்குறி இடுதல்.

     சில சமயங்களில் நமது கோப்புகளில் தமிழ்நாடு அரசு முத்திரையையோ அல்லது மந்தணம், அவசரம், வரைவு, முக்கியம் முதலிய குறியீடுகளை இட வேண்டியிருக்கும். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் முதலிய அரசு அலுவலக கோப்புகளில் வாரியத்திற்கான logo களை பயன்படுத்துவர். இந்த குறியீடுகளோ அல்லது லோகோகளோ கோப்புகளின் ஆரம்பத்திலோ அல்லது கோப்புகளில் உள்ள வாசகங்களுக்கு பின்புலமாகவோ (BACKGROUND) தெரியும்படி அமைத்திருப்பார்கள். நீதிமன்றங்களில் அளிக்கும் தீர்ப்புகளிலும் அதன் நகல்களிளும் அந்தந்த நீதிமன்றங்களின் முத்திரைகள் வாட்டர் மார்க்காக அமைந்திருக்கும். இதை நமது கோப்புகளில் எப்படி அமைப்பது என்பதை இப்போது பார்ப்போம்.
    


நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்பை திறந்து கொள்ளுங்கள். மேலே ரிப்பனில் தெரியும் TAB-ல் மூன்றவதாக உள்ள PAGE LAYOUT என்ற TAB ய்  SELECT செய்து கொள்ளவும். அதில் உள்ள குழுக்களில் (GROUPS) மூன்றவதாக உள்ள PAGE BACKGROUND என்ற GROUPல் உள்ள WATERMARK என்ற COMMAND BUUTON--ஐ  தேர்ந்து எடுக்கவும்.


இப்போது நான்கு விதமான மெனுக்கள் தெரியும். மெனு ஒன்றிலும் மூன்றிலும் எழுத்துக்கள் குறுக்கு வாட்டத்திலும் மெனு இரண்டு மற்றும் நான்கில் படுக்கை வாட்டத்திலும் தெரியும். இவற்றில் எந்த மாதிரி வேண்டுமோ அதை தேர்ந்தேடுத்துக்கொள்ளலாம். இவற்றில் உள்ள வாசகங்களுக்கு பதில் வேறு வாசகம் தேவைப்பட்டாலோ அல்லது படங்கள் (picture / embloms) தேவைப்பட்டாலோ Custom Watermark.. என்ற மெனுவை தேர்ந்து எடுக்கவும். இப்போது கீழ்க்கண்ட உரையாடல் பெட்டி (Dialog Box) ஒன்று தோன்றும்.


வாசகத்தில் மாற்றம் வேண்டும் என்றால் Text Watermark என்ற கட்டத்திற்குள் இருக்கும் ரேடியோ பட்டனை தேர்ந்தெடுக்கவும். Text என்ற கட்டத்திற்குள் தேவையான வாசகத்தை எழுதிக்கொள்ளவும். எழுத்துரு, (Font, Size, Color) எழுத்துக்களின் அளவு மற்றும் அதன் வண்ணங்களை அந்தந்த கட்டங்களில் தேர்ந்தெடுக்கவும். வாசகம் குறுக்காக வேண்டுமா அல்லது படுக்கை வட்டத்தில் வேண்டுமா என்பதையும் அதற்குரிய இடங்களில் தேர்ந்தெடுக்கவும்.



எழுத்துக்கள் தேவையில்லை படங்கள்தான் வேண்டுமென்றால் Text Watermark என்பதற்கு பதிலாக Picture Watermark என்பதை தேர்ந்தெடுத்து Select Picture என்பதை Double Click  செய்யவும்.  உங்கள் படத்தை எங்கு சேமித்து வைத்துள்ளீர்களோ அந்த folder ய் தெரிவு செய்து படத்தினையும் தெரிவு செய்யவும்.  பின்பு Apply என்ற button ய் தெரிவு செய்து OK கொடுக்கவும். தற்போது நீங்கள் தெரிவு செய்த படம் அல்லது நீங்கள் அளித்துள்ள வாசகம் Watermark காக தெரியும். உங்கள் கோப்பினை சேமித்து வெளியேறவும். 

No comments:

Post a Comment