Total Pageviews

Monday, 24 April 2017

WORD - FORMATTING


கோப்புகளில் மாறுதல்களை கையாள்வது எப்படி ?


       நம்முடைய கோப்புகளில் பல நேரங்களில் சில சொற்களையோ, வாக்கியங்களையோ வரிகளையோ அல்லது பத்திகளையோ மாற்றி அமைக்க வேண்டியிருக்கலாம். சில நேரங்களில் வடிவமைப்பில் (FORMATTING) மாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம். எந்த மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தாலும் முதலில் எந்த இடத்தில் இதை செய்யப் போகிறோம் என்பதை மென்பொருளுக்கு தெரிவிக்க வேண்டும்.  எப்படி தெரிவிப்பது? எந்த இடத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அதன் ஆரம்பத்தில் கர்சரை வைக்க வேண்டும். (உங்கள் சொடுக்கியின் மூலமாக கர்சரை அங்கு கொண்டுவந்து சொடுக்கியின் இடது button-ஐ அழுத்துங்கள்.  அல்லது உங்கள் தட்டச்சு பலகையில் உள்ள அம்புக்குறி button-ஐ உபயோகிப்படுத்தி கர்சரை அங்கு கொண்டு வாருங்கள்.). எதுவரையில் மாற்றம் செய்ய வேண்டுமோ  அதுவரை சொற்களையோ, வாக்கியங்களையோ வரிகளையோ அல்லது பத்திகளையோ தேர்தெடுங்கள். (Selection - சொடுக்கியின் இடது button-ஐ அழுத்திக்கொண்டு உரையின் மீது சொடுக்கியை இழுங்கள். வரவில்லை என்றால் Shift button-ஐ அழுத்திக்கொண்டு அம்புக்குறி button-ஐ உபயோகிப்படுத்தி கர்சரை அங்கு கொண்டு வாருங்கள்). இப்போது தேர்ந்தெடுத்த உரைப்பகுதியின் பின்புலம் நீல நிறத்தில் இருக்கும். இப்படி செய்வதைத்தான் Select செய்வது என்று சொல்கிறோம்.  

     இப்போது சில மாற்றங்களை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். உரையில் எழுத்துரு வகையை (Bold) அழுத்தமாக காண்பிக்க வேண்டியிருந்தால் மேலே உள்ள பத்தியில் கூறியபடி உரையை தேர்ந்தெடுங்கள். பின்பு Home Tab-ஐ சொடுக்கி Font குழுவில் உள்ள B என்ற button-ஐ சொடுக்குங்கள்.

        உரையில் எழுத்துரு வகையை (Italik) சாய்வு எழுத்தாக காண்பிக்க வேண்டியிருந்தால் மேலே உள்ள பத்தியில் கூறியபடி உரையை தேர்ந்தெடுங்கள். பின்பு Home Tab-ஐ சொடுக்கி Font குழுவில் உள்ள I  என்ற button-ஐ சொடுக்குங்கள்.



     உரையை  அடிக்கோடிட்டு  (Underline)  காண்பிக்க வேண்டியிருந்தால் உரையை தேர்ந்தேடுத்தபின்பு Home Tab-ஐ சொடுக்கி Font குழுவில் உள்ள U  என்ற button-ஐ சொடுக்குங்கள்.

உரையின் எழுத்துருவை (Font) மாற்ற வேண்டியிருந்தால் உரையை தேர்ந்தேடுத்தபின்பு Home Tab-ஐ சொடுக்கி Font குழுவில் உள்ள எழுத்துரு பெயர் பட்டியல் கட்டத்தில் உள்ள சிறிய முக்கோண button-ஐ சொடுக்கவும். தெரிகின்ற பெயர்களில் எது தேவையோ அதை சொடுக்கவும்.

எழுத்துகளின் அளவை கூட்டவோ அல்லது குறைக்கவோ வேண்டியிருந்தால் பக்கத்தில் எழுத்துகளின் அளவைக் குறிக்கும் கட்டத்தை தேர்ந்தெடுத்து அளவை தேர்ந்தெடுக்கவும். அல்லது அந்த கட்டத்தில் தேவையான அளவை தட்டச்சு செய்யவும். அல்லது உரையை தேர்ந்தெடுத்த பிறகு எழுத்துகளின் அளவைக் குறிக்கும் கட்டத்திற்கு பக்கத்தில் உள்ள A A  இரண்டு button-ல் எழுத்துகளின் அளவைக் கூட்டுவதற்கு A-யையும்  குறைப்பதற்கு A-யையும் பயன்படுத்தலாம். (Short cut Ctrl + ], Ctrl + [ )


நமது உரை ஆங்கிலத்தில் அமையும்போது சில வார்த்தைகளையோ அல்லது சொற்றொடர்களையோ பெரிய (CAPITAL LETTER) எழுத்தில் அமைக்க வேண்டியுருக்கும்.  ஆனால் மறந்துபோய் சிறிய எழுத்தில் அமைத்திருப்போம். அவைகளை மாற்றுவதற்கு Aa என்ற button-ஐ தேர்ந்து எடுத்தால் அதில் Sentence Case, lower case, UPPER CASE, Capitalize Each Word and tOGGLE cASE என்ற நன்கு விருப்ப தேர்வுகள் கிடைக்கும். இதில் முதலில் உள்ளது ஒவ்வரு வாக்கியத்தின் முதல் எழுத்தையும் பெரிய எழுத்தாக மாற்றுவதற்கும், இரண்டாவது தேர்ந்து எடுத்த எழுத்துக்களை சிறிய எழுத்தாக மாற்றுவதற்கும்,  மூன்றாவது தேர்ந்தெடுத்த எழுத்துக்களை பெரிய எழுத்தாக மாற்றுவதற்கும், நான்காவது தேர்ந்து எடுத்த உரையில் ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தையும் பெரிய எழுத்தாக மாற்றுவதற்கும் மற்றும் ஐந்தாவது ஒவ்வொரு சொல்லிலும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்தாகவும்   சிறிய எழுத்துக்களை பெரிய எழுத்தாகவும் மாற்றுவதற்கும் பயன்படும். (Short cut – Shift + F3 (Function key)  ஷிப்ட் button ஐ அழுத்திக்கொண்டு ஒவ்வொரு தடவை F3 button ஐ அழுத்தும்போதும் ஒவ்வுருவிதமாக மாறும்.  தேவையானது கிடைக்கப்பெற்றவுடன் நிறுத்திவிடவும்.)

2Superscript N2 Subscript – தட்டச்சு செய்த எழுத்துக்களில் எந்த எழுத்தை மேல்குறியீடாக காட்ட வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து Home Tab-ஐ சொடுக்கி Font குழுவில் உள்ள x2  என்ற button-ஐ சொடுக்குங்கள். எந்த எழுத்தை கீழ்குறியீடாக காட்ட வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து Home Tab-ஐ சொடுக்கி Font குழுவில் உள்ள x2 என்ற button-ஐ சொடுக்குங்கள். எழுத்துக்களின் வண்ணத்தை மாற்ற வேண்டுமென்றால் Home Tab-ஐ சொடுக்கி Font குழுவில் உள்ள 

என்ற button-ஐயும், உரையின் பின்பல வண்ணத்தை மாற்ற வேண்டுமென்றால் என்ற button-ஐயும் சொடுக்கவும்.



No comments:

Post a Comment