வணக்கம்.
நன்றி , சந்திப்போம்.
கி. ஸ்ரீநிவாஸன்
நான் தமிழ்நாடு அரசு பணியிலிருந்து (புள்ளியில் துறையில்) ஒய்வு பெற்றவன் . 1975ம் ஆண்டு முதல் இதுவரையில் கணிப்பொறி சம்பந்தமான பணியையே செய்து வருகிறேன். 1975ல் கணிப்பொறி பணி என்பது IBM PUNCH CARD மூலம் நடைபெற்றது. அவைகளை பற்றி பின்பொரு சமயம் பார்ப்போம். எனது பனிக்காலத்தில் பல துறைகளில் DEPUTATIONல் கணிப்பொறி சம்பந்தமான பல பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். அதில் முக்கியமானவையாக நான் கருதுவது எனது துறைக்கான SOFTWARE களை நான் தயார் செய்து கொடுத்ததும், புள்ளியில் துறையில் பணியாளர்களுக்கு கணிப்பொறியில் பயிற்சி அளித்ததும், மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தில் புரோகிராமராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றியதும், முதலமைச்சரின் தனிச் செயலகத்தில் பணியாற்றியதும், தற்போது (GUEST FACULTY, ANNA INSTITUTE OF MANAGEMENT, RAJA ANNAMALAIPURAM, CHENNAI - 600028) அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக அவ்வப்போது அழைக்கப்படும்போது பணியாற்றி வருவதுமாகும்.
அரசு துறைகளில் பணியாற்றிவருபவர்களில் கணிப்பொறியை பற்றி அறியாதவர்களுக்கு அடிப்படையைப் பற்றியும், தெரிந்தவர்களுக்கு மேற்கொண்டு தெரிந்து கொள்ளவும் இந்த BLOG உதவும் என்ற எண்ணத்திலே இதை உருவாக்கி தொடர விரும்புகிறேன்.
நன்றி , சந்திப்போம்.
கி. ஸ்ரீநிவாஸன்
No comments:
Post a Comment