கூகுள் தேடுதலில் தந்திரங்கள்
ஏதோ ஒரு போட்டியை ஆரம்பிக்கப் போகிறீர்கள், அல்லது ஏதோ ஒரு
முடிவை எடுக்க வேண்டும் பூவா தலையா பார்க்கவேண்டும். கூகிள் தேடுதல் கட்டத்தில் உள்ள ஒலிவாங்கியில்
(mike) ஒரு சொடுக்கு சொடுக்கி FLIP A COIN என்று கூறுங்கள். இப்போது உங்களுக்காக ஒரு நாணயம்
சுண்டிவிடப்பட்டு பூவோ அல்லது தலையோ (TAIL OR HEAD) விழும்.
உங்களுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது உணவில் அரிசி சேர்க்கலாமா
அல்லது கோதுமை சேர்க்கலாமா. எது மிகவும் நல்லது. இதை எப்படி ஒப்பு நோக்குவது. இதற்கும்
உங்களுக்கு கூகிள் உதவுகிறது. எதை ஒப்பு நோக்குவதயிருந்தாலும் VS என்பதை
நடுவில் சேருங்கள். (உம். Rice vs wheet).
கூகிள் தேடுதல் கட்டத்தில் எதை தேடுகிறீர்களோ அதைப் பற்றிய
முக்கியமான சொற்களை தட்டச்சு செய்யவேண்டும். தேடுதலின் முக்கியத்திற்கு
தகுந்தாற்போல் சொற்கள் வரிசையில் அமையவேண்டும். இவ்வாறு அதிகபட்சமாக 32 சொற்கள் உபயோகபடுத்த முடியும். (உம்.
pattimandram).இப்படி தேடும்போது பட்டிமன்றம் இதுவரையில் எந்தெந்த இடத்தில்
நடந்ததோ, எந்தந்த வருடங்களில் யாராரால் நடந்ததோ அத்தனையும் பட்டியலிடும். சுமார்
5,00,000 விடைகள் ஒரு நிமிடத்திற்குள் கிடைத்துவிடும். தேடுதலை இன்னும் விரிவாக்கினால்
நமக்கு தேவையானவற்றை சுலபமாக அடையலாம். அப்படி தேடும்போது ஒவ்வொரு சொல்லின்
முன்பும் + என்ற குறியீடை சொல்லிற்கும் குறியீட்டிற்கும் இடைவெளி இல்லாமல்
குறிப்பிடவேண்டும். திருச்சியில் 2015 பொங்கல் நாளில் சாலமன் பாப்பையா
கலந்துகொண்ட பட்டிமன்ற தகவல் பெற எப்படி தேட வேண்டும் என்பதையும் படிப்படியாக ஒவ்வொரு தேடுதலுக்கும் எப்படி
விடைகள் கிடைக்கின்றன என்பதையும் உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளது.
விடைகள் எப்படி குறைந்து வருகின்றன என்பதை கவனிக்கவும்.
இதைப் போலவே நம் தேடுதலில் எந்தந்த தகவல்கள் வேண்டாமோ
அவைகளுக்கு முன்பாக இடைவெளி இல்லாமல் – (கழித்தல்) என்ற குறியீடை சேர்க்கவும். (உம். suzuki -japan -car -scooter -china -canada -america –maruti suzuki ஐ பற்றிய தகவல்களில் ஜப்பான், கார்,
ஸ்கூட்டர், சீனா, கனடா, அமெரிக்க, மாருதி
போன்ற தகவல்கள் இடம்பெற வேண்டாம்.)
நாம் தகவல்களை தேடும்போது. தேடுதல்களுக்கு ஒரு
எல்லையை வகுப்போமானால் (range search) குறைந்த மற்றும் மேல் மதிப்புகளுக்கு
(lower and higher values) இடையே .. ( இடைவெளியில்லாமல் இரண்டு
புள்ளிகள் வைக்கவேண்டும்). உம். sachin tendulkar 2000..2005 சச்சின் டெண்டுல்கரை பற்றிய தகவல்கள் 2000
முதல் 2005 வரை கிடைக்கும், tv Rs.10000..Rs.15000 TV ரூபாய் 10000
முதல் ரூபாய் 15000 வரை உள்ள தகவல்கள். இம்மாதிரியான தேடுதல்களில் எங்கெங்கு
அளவுகள் தேவையோ அதாவது ரூபாய், லிட்டர், கிலோ, சதுர அடி, சதுர மீட்டர் போன்ற உப
தகவல்களையும் செலுத்தவேண்டும். இல்லையெனில் நமக்கு தேவையற்ற தகவல்கள் வந்து
குவியும்.
கூகிள் தேடுதல் கட்டத்திற்கு கீழே பலவிதமான
தேடுதல் விருப்பங்கள் All Images News Videos Maps books flights tools
settings முதலியவை உள்ளன. தேடுதல் கட்டத்தில் தேவையானவற்றை தட்டச்சு
செய்துவிட்டு இந்த விருப்பங்களில் எதை தேர்ந்தேடுக்கிறோமோ அதற்கேற்றாற்போல்
விடைகள் கிடைக்கும். இவற்றில் tools என்பதை தேர்வு செய்தால் Any Country Any
Time All Results என்ற மூன்று தலைப்புகளின் கீழ் பல் வேறு விருப்பங்கள்
தோன்றும். அவைகளில் எவற்றை தேர்ந்தேடுக்கிறோமோ அதற்கேற்றாற்போல் விடைகள்
கிடைக்கும். தேடுதல்களுக்கான சொற்களை தட்டச்சு செய்யும்போதே நமக்கு விடைகள் எந்த
விதத்தில் கிடைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். உம். MS Word tutorial ppt
. Ms word ஐ பற்றிய டுடோரியல் power point ல் வேண்டும் என்று அர்த்தம்.
சில சமயங்களில் தேடுதலின் போது நமது
விருப்பம்போல் நாம் எந்த வகையில் சொற்களை அமைத்திருக்கிறோமோ அதே மாதிரியான விவரங்கள்தான்
தேவையெனில் நாம் குறிப்பிடும் சொற்தொடர்களுக்கு முன்னும் பின்னும் “ “
அமைக்கவேண்டும். உம். ”World War I”
தேடுதலின் போது நாம் தேடப்படும் தகவல்
கிடைக்கும் தளத்தின் பெயர் நமக்குத் தெரியுமானால் தளத்தின் முகவரியை குறிப்பிட்டு
தேடும் சொற்களை தட்டச்சு செய்யவேண்டும். உம். site:annauniv.edu admission
தேடும் சொற்கள் நமக்கு சரியாக தெரியாதபோது தெரிந்த
எழுத்துக்களை தட்டச்சு செய்து அதற்க்கு பின்னால் * என்ற குறியை தட்டச்சு செய்ய
வேண்டும். தெரியாத எழுத்துக்களின்
எண்ணிக்கை தெரியுமானால் தெரிந்த எழுத்துக்களை தட்டச்சு செய்து அதற்க்கு பின்னால்
எத்தனை எழுத்துக்கள் தெரியாதோ அத்தனை ? (கேள்விக்குறி) தட்டச்சு செய்யவேண்டும்.. இவைகளை முன்பக்கம் அல்லது பின்பக்கம் எங்கு வேண்டுமானாலும் சேர்க்கலாம். (* ? area known as wild cards)
கூகிள்
தேடுதலில் newspaper archeves என்று தட்டச்சு செய்தோமானால் 1900
லிருந்து செய்தி தாள்களின் பதிப்புகள் கிடைக்கும்.
தற்போதைய
நேரம் என்ன என்று பார்க்க தேடுதல்
பெட்டியில் time current என்று தட்டச்சு செய்யவும். இப்போது பிரான்சில்
நேரம் என்ன என்று பார்க்க தேடுதல் பெட்டியில் time in France என்று
தட்டச்சு செய்யவும்.
ஒரு
இடத்தில் எப்போது சூரியன் உதிக்கும் எப்போது சூரியன் மறையும் என்று அறிய Sun
raise and Sun set in என்று தட்டச்சு செய்து இடத்தின் பெயரையும் தட்டச்சு
செய்யவும். உம் Sun Raise and Sun set in Kanyakumari.
நீங்கள்
வாடகைக்கு வீடு தேடுகிறீர்கள் வீட்டின் வாடகை குறைவாக இருக்கவேண்டும் அல்லது வீடு
அலங்கரிக்கப்பட்ட வீடாக இருக்கவேண்டும் (இரண்டு விருப்பங்கள் இதுவோ அல்லது அதுவோ )
இந்த அல்லது என்பதை OR என்று பெரிய எழுத்தில் (CAPITAL LETTERS) குறிப்பிடவேண்டும். இரண்டு விருப்பபடியும் இருக்கவேண்டும் அதாவது
வீட்டின் வாடகை மிக குறைவாகவும் வேண்டும் வீடும் அலங்கரிக்கப்பட்டு இருக்கவேண்டும்
என்று நினைத்தால் OR என்பதிற்கு பதில் and என்று தட்டச்சு
செய்யவேண்டும்.
ஒரு
அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு (one unit to another unit) மாற்ற
விரும்பினால் Convert என்று தட்டச்சு செய்யவும். உம். 1$ to Rupees, 10m
to feet, 10.00GMT to IST.
கூகுளில் உங்கள் கணக்கீடுகளைக் கூட செய்யலாம். உம். தட்டச்சு கட்டத்தில் 4
* 5 + 2 – 3/3 என்று தட்டச்சு செய்யுங்கள். விடை 21 என்று வரும்.
அல்லது தட்டச்சு பெட்டியில் calculator என்று தட்டச்சு செய்யுங்கள். உடனே
திரையில் ஒரு calculator தோன்றும்
ஒரு
இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லவேண்டியுள்ளது. எவ்வளவு தொலைவு எவ்வளவு
நேரம் ஆகும் என்று தெரிய தேடுதல் கட்டத்தில் distance from xxx to yyy
என்று தட்டச்சு செய்யுங்கள. xxx
என்ற இடத்தில் எங்கிருந்து என்பதையும் yyy என்ற இடத்தில் எங்குவரை
என்பதையும் குறிப்பிடவேண்டும்.
ஒரு
இடத்திற்கு செல்ல வழி தெரியவில்லை என்றால் Navigate from xxx to yyy என்று
தட்டச்சு செய்யுங்கள. xxx என்ற
இடத்தில் எங்கிருந்து என்பதையும் yyy என்ற இடத்தில் எதுவரை என்பதையும் குறிப்பிடவேண்டும். இப்போது எந்தெந்த சாலைகள் வழியாக எந்தெந்த
பக்கத்தில் எவ்வளவு தொலைவு வரை செல்ல வேண்டும் என்பதை அழகாக படத்துடன் விளக்கமாக காண்பிக்கும்
சொற்களுக்கு
அர்த்தம் தெரிவதற்கு தேடுதல் பெட்டியில் define: என்று தட்டச்சு செய்து தேவையான சொல்லையும்
தட்டச்சு செய்யவும். அல்லது வெறுமனே
தட்டச்சு செய்தாலும் போதும். அல்லது ஒலிவாங்கியில் (mike) படத்தில் சொடுக்கி அர்த்தம் தேவையான
சொல்லை வாயால் கூறவும். உம். confusion இப்போது அந்த சொல்லிற்கான
விளக்கங்கள் கிடைக்கும். ஒலிவாங்கியில் (mike )திரும்பவும் சொடுக்கி இப்போது confusion images என்று கூறுங்கள். இப்போது அந்த சொல்லிற்கான எல்லா படங்கள்
கிடைக்கும். confusion cliparts என்று கூறுங்கள். இப்போது அந்த சொல்லிற்கான cliparts
படங்கள் கிடைக்கும்.
ஒரு
சொல்லின் ஆதி என்ன? அது எப்படி எப்படியெல்லாம் மருவிற்று என்று அறிய வேண்டுமானால்
தேடுதல் பெட்டியில் ETIMOLOGY: என்று தட்டச்சு செய்து சொல்லை
குறிப்பிடவும். உம. ETIMOLOGY: SIMPLE. இப்போது SIMPLE
என்ற சொல்லின் அர்த்தம் அதனுடைய ஆதி முதலிய விவரங்கள் திரையில் தெரியும். அதன்
கீழ் TRANSLATION, WORD ORIGIN AND MORE DEFINITIONS என்று ஒரு விருப்பத்
தேர்வு தெரியும், அதில் சொடுக்கினால் இன்னும் பல விவரங்கள் தெரிய வரும்.
ஒரு
சொல்லிலிருந்து பல சொற்கள் கண்டுபிடிக்க வேண்டுமா? Anagaram: என்று
தட்டச்சு செய்து உங்களுக்கு தேவையான சொல்லை கொடுக்கவும். உம். Anagaram: images
எக்ஸ்செலில்
ஒரு பட்டியல் தயார் செய்கிறீர்கள்.கடைசியில் வரும் கூடுதல் தொகைக்கு எழுத்தால்
எழுதவேண்டும். அந்த தொகையை தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்து = english
என்றோ அல்லது in english என்றோ தட்டச்சு செயங்கள். வரும் விடையை நகலெடுத்து
ஒட்டுங்கள். 13442628 IN ENGLISH OR 13442628=ENGLISH.
ஒன்றைப்போல்
வேறு எதாகிலும் உள்ளதா என்று தெரிந்துகொள்ள RELATED: என்று தட்டச்சு
செய்யவும். உம்.RELATED: தினமலர்.COM இப்போது எனென்ன நாளிதழ்கள்
உள்ளதோ அத்தனை விவரங்களும் வரிசையாக
கிடைக்கும்.
நீங்கள் TIMER
வேண்டுமானாலும் செட் பண்ணலாம். உம். SET TIMER FOR 2 MIN








No comments:
Post a Comment