எக்ஸ்செலில் தகவல்கள் பதியும்போது அத்தகவல்கள் சுமார் 25
வரிகளுக்கு மிகும்போதும் அல்லது Scrollbar
ஐ உபயோகித்து workshhet ஐ மேல்நோக்கி நகர்த்தும்போதும் முதல் வரியில்
அல்லது இரண்டு மூன்று வரிகளில் பதிந்து வைத்திருக்கும் தகவல்களின் தலைப்புகள் பார்க்க
முடியாமல் மறைந்து போகும். அதேபோல் தகவல்கள்
10 அல்லது 15 பத்திகளுக்கு மிகும்போதும் workshhet
ன் கீழ் இருக்கும் Scrollbar
ஐ வலது பக்கமாக நகர்த்தும்போதும் முதல் பத்தியில் அல்லது இரண்டு மூன்று
பத்திகளில் பதிந்து வைத்திருக்கும்
தகவல்களின் தலைப்புகள் பார்க்க முடியாமல் மறைந்து போகும். இதனால் பதியும் தகவல்கள்
எந்த பத்தி தலைப்புகளின் கீழ் அல்லது எந்த வரியில் பதிகிறோம் என்பதோ அல்லது
பார்வையிடுகிறோம் அல்லது திருத்துகிறோம் என்பதோ தெரியாமல் போய்விடும். எனவே இத்
தலைப்பு பத்திகள் / வரிகள் மறையாமல் இருப்பதற்கு
Ribbon ல் View என்ற TAB ல் சொடுக்குங்கள்.
அதில் இரண்டாவதாக வரும் (Freeze Top_Row) விருப்பத்
தேர்வில் சொடுக்குங்கள். உங்களது worksheet ன் முதல் வரி மறையாமல் நிலையாக
இருக்கும். அதாவது உங்கள் கர்சரை கீழ்
நோக்கி எத்தனை வரிசைகள் நகர்த்தினாலும் முதல் வரி மறையவே மறையாது. அதேபோல் மூன்றாவது விருப்பத் தேர்வில் சொடுக்கினால்
. உங்களது worksheet ன் முதல் பத்தி
மறையாமல் நிலையாக இருக்கும்.
அதாவது உங்கள் கர்சரை பக்கவாட்டில்
எவ்வளவு தூரம் நகர்த்தினாலும்
முதல் பத்தி மறையவே மறையாது.
நீங்கள் கீழ்
நோக்கி நகர்த்தினாலும் சரி பக்கவாட்டில் நகர்த்தினாலும் சரி இரண்டு பக்கங்களிலும்
இருக்கும் தலைப்புகளும் மறையக்கூடாது என்று விரும்பினால் எவ்வளவு வரிகள்(ROWS) மறைக்கக்கூடாதோ அதற்கு அடுத்த வரியிலும், எவ்வளவு பத்திகள்(COLUMNS) மறைக்கக்கூடாதோ அதற்கு அடுத்த பத்தியிலும் கர்சரை கொண்டுவந்து
வைத்துக்கொண்டு Freeze Pane விருப்பத்தேர்வில் முதலாவது மெனுவை (Freeze
Pane) தேர்ந்தெடுங்கள். இப்போது கர்சர் எந்த பக்கத்தில் சென்றாலும்
தலைப்புக்கள் மறையாமல் இருக்கும்.





No comments:
Post a Comment