Total Pageviews

Tuesday, 2 May 2017

MS WORD Formatting - 2

உரையை சீரமைத்தல்

உரையை சீரமைத்தல் என்பது ஒரு பொதுவான வார்த்தையாகும். உரையின் நடையை மாற்றி அமைப்பது, அதில் உள்ள எழுத்துப் பிழைகளை களைவது, தேவையான படங்களை இணைப்பது, எழுத்துக்களின் தோற்றங்களை மாற்றுவது, வரிகளுக்கு இடையே இடைவெளிகளை அமைப்பது, பக்கங்களுக்கு இடது, வலது பக்கத்திலும் மேலும் கீழும் இடைவெளிகளை உண்டாக்குவது  உரையின் பக்கங்களுக்கு சுற்றிலுமோ அல்லது பத்திகளுக்கு சுற்றிலுமோ அழகு கட்டடங்கள் அமைப்பது, பத்திகளுக்கு உடுகுறி (Bullets) மற்றும் எண்ணிக்கை அளிப்பது போன்று இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.  அவைகளை ஒவொன்றாக காணுவோம்.

MS-WORD-ல் தட்டச்சு செய்யும்போது (உதாரணம்) கீழ் கண்டவாறு அமையும்

On the, the galleries include items that are to coordinate with the overall look of your document. You can use these galleries to insert tables, headers, footers, lists, cover pages, and other document building blocks. When you create pictures, charts, or diagrams, they also coordinate with your current document look. Insert tab Insert tab Insert tab Insert tab Insert tab Insert tab Insert tab Insert tab
You can easily change the formatting of selected text in the document text by choosing a look for the selected text from the Quick Styles gallery on the Home tab. You can also format text directly by using the other controls on the Home tab. Most controls offer a choice of using the look from the current theme or using a format that you specify directly.


நாம் தட்டச்சு செய்யும்போது ஒவ்வொரு பத்தியின் முதல் வரியை மட்டில் வலது பக்கமாக கொஞ்சம் நகர்த்தி ஆரம்பிப்போம். இந்த முறைக்கு First line indent என்று பெயர். ஒரு சிலர் தட்டச்சு செய்யும்போதே ஒவ்வொரு பத்தியின் ஆரம்பத்திலும் தட்டச்சு பலகையில் உள்ள TAB button ஐ ஒரு தடவை அழுத்திவிட்டு ஆரம்பிப்பார்கள்.  நமது உரை ஓரிரு பத்திகளில் முடிவதாய் இருந்தால் இந்த முறை சரியாக இருக்கும்.  நமது உரை பக்கக் கணக்கில் இருக்கும்போது ஒவ்வொரு பத்திக்கும் TAB ஐ அழுத்துவதை விட, உரையை தட்டச்சு செய்தபின்பு, அதை முழுவதுமாக தேர்வு செய்து (CTRAL + A) Ruler ல் உள்ள இடது பக்க மேல் பட்டனை மவுசின் இடது பட்டனை அழுத்திக்கொண்டு தேவையான அளவிற்கு வலது புறமாக நகர்த்தினால் அத்தனை பத்திகளின் முதல் வரியிலும் இடைவெளி வந்துவிடும். கீழுள்ள உதாரணத்தை பார்க்கவும்.


மேலுள்ள பத்திகள் இடது பக்க இடைவெளி ஒரே சீராக இருக்கும்படி அமைந்துள்ளது.  நாம் கடிதங்கள் தயார் செய்யும்போது தேதி வலது பக்கமாகவும் அனுப்புனர் விலாசம் இடது பக்கமாகவும் அமையும் படி பார்த்துகொள்வோம்.  அம்மாதிரி வலது பக்கம் அமைய Paragraph குழுவில் உள்ள alignment பட்டன்கள் உதவுகின்றன. உரையை தேர்ந்தெடுத்த பின்பு நமக்கு தேவையான பட்டன்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.

இடது புற இடைவெளி ஒரே சீராக அமைக்கப்பட்டது (Left Alignment)


வலதுபுற இடைவெளி ஒரே சீராக அமைக்கப்பட்டது (Right Alignment)

 இடைவெளி இருபுறமும் ஒரே சீராக அமைக்கப்பட்டது (Justification)
உரை குறுக்குவாட்டில் நடுவாக அமைக்கப்பட்டது (Center)
மேற்குறிய இடைவெளி அமைக்கும் முறைகளுக்கு உரையை தேர்ந்தெடுத்த பின்பு கீழ்க்காணும் short cut -களை உபயோகிக்கலாம்.

சுருக்கு வழிகள் 


         இடது புறம் ஒரே சீராக அமைய  CTRL + L
         வலது புறம் ஒரே சீராக அமைய  CTRL + R
         இரு புறம் ஒரே சீராக அமைய    CTRL + J
         உரை நடுவில் அமைய           CTRL + E





உரைக்கு வரி இடைவெளி விடுதல்


நம்முடைய உரைக்கு வரி இடைவெளி கொடுப்பதற்கு உரையை தேர்ந்தெடுத்த பின்பு paragraph குழுவில் Line Space என்ற பட்டனுக்குப் பக்கத்தில் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் சொடுக்கினால் அதில் பலவிதமான விருப்பத்தேர்வுகள் கிடைக்கும்,  அதில் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.


வரி இடைவெளி விட சுருக்கு வழிகள் (Short cuts)

CTRL + 1 இடைவெளி 1 வரி
CTRAL + 2 இடைவெளி 2 வரிகள்

CTRL + 5  இடைவெளி 1½ வரிகள்    

BULLETS AND NUMBERING (உடுகுரியிடுதலும் எண்களிடுதலும்)


உரையை நாம் தயார் செய்யும்போது சில இடங்களில் அதன் முக்கியத்தை கருதி சில பத்திகளுக்கு உடுகுரியிட்டு காண்பிக்க வேண்டியிருக்கும்.

உடுகுறியிடுவதற்க்கு முன்பாக அந்த பத்திகளை சிறிது உள்தள்ளி குறியிடவேண்டும்.

இந்த வேலைகளை word தானாகவே செய்ய முதலில் எந்த பத்திகளுக்கு உடுகுறியிட வேண்டுமோ அந்த பத்திகளை (select) தேர்வு செய்யுங்கள்.

Home tab ல் Paragraph குழுவில் மேல் பகுதியில் முதலில் உள்ள Bullets என்ற button ல் சொடுக்குங்கள்.


வருகின்ற மெனுவில் எது தேவையோ அக்குறியை தேர்ந்தெடுங்கள் 











தொடரும்......




No comments:

Post a Comment