MS WORD 2007
MS WORD என்பது MS Office தொகுப்பில் உள்ள ஒரு மென்பொருளாகும்(Software). இது வரைவுகள், கடிதங்கள், அறிக்கைகள், சிறிய அளவிலான அட்டவணைகள் முதலியவைகளை தயாரிப்பதற்கும், அவைகளை சேமிக்கவும், கையாளவும், அச்சு எடுக்கவும் பயன்படும்.
MS WORD ஐ எப்படி ஆரம்பிப்பது ?
முதலில் டாஸ்க் பாரில் உள்ள Start பட்டனை க்ளிக் செய்யுங்கள். ஒரு pop up மெனு தோன்றும். அதில் All Progroms என்பதை க்ளிக் செய்யவும். தற்போது வேறொரு மெனு பட்டியல் அதன்மீது தோன்றும். அதில் Microsoft Office என்பதை க்ளிக் செய்யவும். தற்போது வேறொரு மெனு பட்டியல் அதன்கீழ் தோன்றும். அதில் Microsoft Office Word 2007 என்பதை க்ளிக் செய்யவும். இப்போது WORD ன் சாளரம்(window) தோன்றும்
MS WORD 2003 வரை நமது செயல்பாடுகளை (Functions) Menu Bar, Standard Tool Bar, Formatting Tool
Bar, Pop Up Menu, Task Pan and Dropdown
மெனு முதலியவைகளின் மூலம் செய்து வந்தோம். உங்களது பழைய ஞாபகத்திற்காக MS
WORD 2003 அமைப்பை கீழே காண்பித்துள்ளேன்.
MS Office 2007 முதல்
இதன் அமைப்பு சற்றே மாறுபட்டு அமைந்துள்ளது.
நாம் செய்யக்கூடிய
வேலைகளுக்கு தகுந்த மாதிரி பொதுவான வகையில் இதன் மெனுக்களை 8 விதமாக மேல்
வரிசையில் அமைத்துள்ளனர். இவைகளுக்கு TAB என்று பெயர். ஒவ்வொரு TAB ன் கீழும் அது சம்பந்தமான குழுக்கள்
(Groups) அமைந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும்
அந்தந்த குழுக்கள் சம்பதமான கட்டளைகள் (Commands, Buttons, boxes or menus)
அமைந்துள்ளன.

MS Word 2003 ல்
முதல் மெனு File என்றிருக்கும். MS Word
2007 ல் முதல் மெனுவிர்க்கு Office Button என்று பெயர்.
இந்த
மெனுவில் புதிய (New) கோப்பினை உருவாக்கவும், முன்பே தயார் செய்து வைத்திருக்கும்
கோப்புகளை திறந்து (Open) பார்பதற்கும், புதியதாக உருவாகிய அல்லது திருத்திய
கோப்புகளை சேமிப்பதற்கும் (Save) மெனுக்கள் உள்ளன. இதைத் தவிர அச்சு (Print) எடுப்பதற்க்கும், இந்த கோப்பினை மூடுவதற்கும்
(Close) உரிய மெனுக்களும் இதில் உள்ளன. இதில் சில மெனுக்களின் வலது பக்கத்தில் முக்கோண வடிவில்
குறியீடு இருக்கும். அந்த குறியீடுகளை
மவுஸ் கொண்டு தெரிந்தெடுத்தால் அதன்கீழ் சில Submenus தெரியவரும்.
உதாரணம்

இந்த ரிப்பனுக்கு மேல்புறத்திலோ
அல்லது கீழ்புறத்திலோ quick access toolbar அமைந்திருக்கும். இதில் நாம் அடிக்கடி
உபயோப்படுத்தகூடிய மெனுக்களின் icon கள் அமைந்திருக்கும்.
Office Button க்கு பக்கத்தில் Home என்ற Tab இருக்கும்.
இதனுடைய குழுக்களில் இருக்கும் Command மற்றும் Button கள் நமது கோப்பின் (format) வடிவத்தில் தேவையான மாறுதல்கள் செய்ய
பயன்படும். இவற்றினை ஒவ்வொன்றாக
பாப்போம்.
இப்போது உங்கள் கீ
போர்டு மூலம் ஏதாவது தட்டச்சு செய்யுங்கள். அல்லது =rand(10,5) என்று தட்டச்சு
செய்து என்ட்டர் என்ற பட்டனை அழுத்தவும். இப்போது கீழ்கண்டவாறு பத்து பத்திகளும்,
ஒவ்வொரு பத்தியிலும் ஐந்து வாக்கியங்களுமாக திரையில் தெரியும்.
கர்சர் இயக்கம்
இப்போது இந்த திரையில் தேவையான இடங்களுக்கு செல்வதற்கு ← ↑ → ↓ பட்டன்களையும் Page up, Page Dn, Home, End போன்ற பட்டன்களை பயன்படுத்தலாம். ← → இந்த பட்டன்கள்
கர்சரை ஒரு எழுத்துக்கு இடது
அல்லது வலது புறமாக செலுத்துவதற்கு பயன்படும்.
↑ ↓ இந்த பட்டன்கள் கர்சரை ஒரு வரிக்கு மேலாகவோ அல்லது கீழாகவோ
செலுத்துவதற்கு பயன்படும். ஒரு வரியின் ஆரம்பத்திற்கு செல்ல Home என்ற பட்டனையும் ஒரு வரியின் முடிவிற்கு செல்ல End என்ற பட்டனையும் பயன்படுத்தவும்.
கோப்பின் ஆரம்பத்திற்கு
செல்ல Ctrl என்ற பட்டனுடன் Home என்ற
பட்டனையும் சேர்த்து அழுத்தவும். ஒரு கோப்பின் முடிவிற்கு
செல்ல Ctrl என்ற பட்டனுடன் End என்ற பட்டனையும் சேர்த்து
அழுத்தவும்.
திரையின் ஆரம்பத்திற்கு செல்ல Page Up என்ற பட்டனையும் ஒரு திரையின் முடிவிற்கு செல்ல Page Dn என்ற பட்டனையும் அழுத்தவும்.
ஒவ்வொரு பத்தியின் முடிவிற்கு செல்ல CTRLஐ அழுத்திக்கொண்டு கீழ் நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
எங்காவது ஒரு எழுத்தை .சேர்க்க வேண்டுமென்றால் கர்சரை அந்த இடத்திற்கு கொண்டு சென்று
தேவையான எழுத்தை அழுத்தவும். ஒரு எழுத்தை .அழிக்க
வேண்டுமென்றால் கர்சரை அந்த இடத்திற்கு கொண்டு செல்லவும். உங்கள் கர்சர் அழிக்க வேண்டிய எழுத்திற்கு
முன்பிருந்தால் Backspace என்ற பட்டனையும், கர்சர் அழிக்க வேண்டிய எழுத்திற்கு பின்பிருந்தால்
Delete என்ற பட்டனையும் பயன்படுத்தவும்.
ஒவ்வொரு சொல்லின்
ஆரம்பத்திற்கு செல்ல CTRLஐ அழுத்திக்கொண்டு இடது அம்புக்குறியையோ (இடது பக்கமாக செல்ல) அல்லது வலது அம்புக்குறியையோ (வலது பக்கமாக செல்ல) அழுத்தவும்.
ஒவ்வொரு
பத்தியின் ஆரம்பத்திற்கு செல்ல CTRLஐ அழுத்திக்கொண்டு மேல் நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
ஒவ்வொரு பத்தியின் முடிவிற்கு செல்ல CTRLஐ அழுத்திக்கொண்டு கீழ் நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.





No comments:
Post a Comment