- CTRL கீயை அழுத்திக்கொண்டு உரையில் சொடுக்கினால்
அந்த வாக்கியத்தை (Sentence) தேர்ந்தெடுக்கும்.
- Alt கீயை அழுத்திக்கொண்டு உரையை தேர்வுசெய்தால் செவ்வக வடிவில் தேர்வு செய்யலாம்.
- பின்வரும் எழுத்துக்களில் எதையாவது ஒன்றை மூன்று தடவை அழுத்தி என்ட்டர் கீயை அழுத்தினால் முழுவதுமான கோடு தோன்றும். =, +, -, _, ~, #, *
- இக்கோட்டை சாதாரணமாக Del மூலமாகவோ Backspace மூலமாகவோ அழிக்க முடியாது. இக்கோட்டை அழிப்பதற்கு CTRL அழுத்திக்கொண்டு Q வை அழுத்தவேண்டும்.
- + (கூட்டல் குறியை) அழுத்தியபின்பு பலதடவை – (கழித்தல் குறியை ) அழுத்தி திரும்பவும்கூட்டல் குறியை அழுத்தி enter கீயை அழுத்தினால் ஒரு Cell கிடைக்கும். திரும்ப திரும்ப செய்து enter கீயை அழுத்தினால் ஒரு செல் வரிசை கிடைக்கும். கடைசி செல்லின் உள்ளே tab கீயை அழுத்தினால் மற்றொரு வரிசை புதிதாக உருவாகும்.
- ஒரு வரியில் எந்த இடத்தில் எழுத
விரும்புகிறீர்களோ அங்கு இருமுறை சொடுக்கி விட்டு எழுதினால் அந்த இடத்திலிருந்து
எழுதலாம். (உதாரணமாக: கடிதம் எழுதி கடைசியில் தங்கள் உண்மையுள்ள என்று எழுதுவதற்கு
நிறைய இடம் விட்டு எழுதுகிறோம். இடம் விடுவதற்கு space bar அல்லது Tab ஐ
பயன்படுத்துகிறோம் அல்லவா? தேவையான இடத்தில்
இரு தடவை சொடுக்குவதின் மூலம் அதை தவிர்க்கலாம்.
- பத்தியை (Paragraph) விருப்பப்படி இடமாற்றம் செய்ய
ஒரு பத்தியை அந்த இடத்திலிருந்து மேலாகவோ அல்லது கீழாகவோ
இடமாற்றம் செய்ய விரும்புகிறீர்களா ? எந்த பத்தியை இடமாற்றம் செய்ய
விரும்புகிறீர்களோ அந்த பத்தியில் கர்சரை வைத்துக்கொண்டு Shift key யுடன் ALT
key ஐயும் ஒருசேர அழுத்திக்கொண்டு é அல்லது ê கீயை தேவைக்கு தகுந்தாற்போல் அழுத்தவும். (é பத்தி மேல்பக்கம் செல்லவும் ê கீழ் பக்கம் செல்லவும் உபயோகிக்கவும்.)
very useful web site
ReplyDelete