Total Pageviews

Thursday, 27 April 2017

MS WORD - COPY AND PASTE


உரையை நகல் எடுத்து ஒட்டுதலும், வெட்டி ஒட்டுதலும் (COPY, CUT AND PASTE)


அறிக்கை போன்றவைகளை தயாரிக்கும்போது அதன் முடிவில் அந்த அறிக்கையின் சாரம்சத்தை (summary) கூறுவோம் .  அதில் அந்த அறிக்கையில் விவாதித்திருக்கும் முக்கிய கருத்துக்களை எடுத்து திரும்பவும் வரிசைப்படுத்துவோம்.  அதுமாதிரி செய்யும்போது உரையில் அந்த கருத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.  பின்பு HOME TAB-ல் CLIPBOARD என்ற குழுவில் உள்ள COPY என்ற BUTTON ஐ சொடுக்க வேண்டும். இப்போது நாம் எந்த சொற்களை / வரிகளை / பத்திகளை தேர்ந்தெடுத்து நகல் எடுத்துள்ளோமோ அந்த உரையின் பகுதி கணிப்பொறியில் உள்ள நினைவகத்தில் பதிவாகியிருக்கும். இப்போது கர்சரை உரையில் எந்த பகுதியில் இதை பதிவு செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு கர்சரை கொண்டு சென்று சொடுக்குங்கள். பின்பு HOME TAB-ல் CLIPBOARD என்ற குழுவில் உள்ள PASTE  என்ற BUTTON ஐ சொடுக்க வேண்டும்.

(மாற்று  வழி: 1. உரையை தேர்ந்தெடுத்த   பின்பு மவுசில் வலது பக்க BUTTON ஐ சொடுக்கி வரும் மெனுவில் COPY என்பதில் சொடுக்கவும்.  எந்த பகுதியில் இதை பதிவு செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு கர்சரை கொண்டு சென்று மவுசில் வலது பக்க BUTTON ஐ சொடுக்கி வரும் மெனுவில் PASTE என்பதில் சொடுக்கவும். அல்லது SHORT CUT – நகலெடுக்க CTRL ஐ அழுத்திக்கொண்டு C ஐ அழுத்தவும் . ஓட்ட வேண்டிய இடத்தில் CTRL ஐ அழுத்திக்கொண்டு V ஐ அழுத்தவும்

இதுவரையில் நாம் பார்த்தது நகலெடுத்து ஓட்டுவது எப்படி. இனி நாம் பார்க்கப்போவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் / சொற்றொடர் / வாக்கியங்கள் அல்லது பத்திகள் இவைகளை எப்படி வெட்டி ஓட்டுவது ? (CUT and PASTE).

சில சமயங்களில் உரையை எழுதிவிட்டு படித்துப் பார்க்கும்போது சில சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ அல்லது பத்திகளையோ முன் பின்னாக மாற்றிப் போட்டால் நன்றாக இருக்கும்போல் தோன்றும்.  அந்த சமயங்களில் உரையின் எந்தப் பகுதியை மாற்ற விரும்புகிறோமோ அந்தப் பகுதியை தேர்ந்தெடுத்து HOME TAB-ல் CLIPBOARD என்ற குழுவில் உள்ள CUT   என்ற BUTTON ஐ சொடுக்க வேண்டும். பின்பு HOME TAB-ல் CLIPBOARD என்ற குழுவில் உள்ள PASTE  என்ற BUTTON ஐ சொடுக்க வேண்டும்.

(மாற்று  வழி: 1. உரையை தேர்ந்தெடுத்த   பின்பு மவுசில் வலது பக்க BUTTON ஐ சொடுக்கி வரும் மெனுவில் CUT என்பதில் சொடுக்கவும்.  எந்த பகுதியில் இதை பதிவு செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு கர்சரை கொண்டு சென்று மவுசில் வலது பக்க BUTTON ஐ சொடுக்கி வரும் மெனுவில் PASTE என்பதில் சொடுக்கவும்) (SHORT CUT – நகலெடுக்க CTRL ஐ அழுத்திக்கொண்டு X ஐ அழுத்தவும் . ஓட்ட வேண்டிய இடத்தில் CTRL ஐ அழுத்திக்கொண்டு V ஐ அழுத்தவும்)

No comments:

Post a Comment