Total Pageviews

Thursday, 20 April 2017

MS WORD - TITLE BAR AND RULER

MS WORD – TITLE BAR


நாம் தற்போது உபயோகித்துக் கொண்டிருக்கும் கோப்பின் பெயரை வெளிப்படுத்தும்.  புது கோப்பாக இருந்தால் document 1 என்று தெரியும்.  கோப்பினை சேமித்தபிறகு எந்த பெயரளித்தோமோ அதை வெளிப்படுத்தும்.

ஒவ்வொரு Tab-யும் தேர்வு செய்யும்போது அதில் அடங்கியுள்ள குழுக்களும் (Groups) அதில் உள்ள கட்டளைகளும் (Commands) தெரியும். ஒவ்வொரு குழுவின் கீழாக வலது பக்கத்தில் ஒரு சிறிய அம்புக்குரியுடன் கூடிய கட்டம் ஒன்று தெரியும்.  இதற்கு Dialog Box Launcher என்று பெயர். இதை தேர்வு செய்தால் அந்த குழுவின் எல்லா மெனுக்களும், விருப்பத் தேர்வுகளும் கிடைக்கும். 

MS WORD – Ruler

Ruler என்பது ரிப்பனுக்கு கீழே தெரியும். இதன் மூலம் நமது கோப்பில் இடது மற்றும் வலது பக்க இடைவெளிகளை (Margins) நியமிக்க முடியும். ஒவ்வொரு பத்தியின் முதல் வரி (First Line) ஆரம்ப இடைவெளி (indent) விடுவதை நியமிக்க முடியும். Rular ல் வெண்மை இடைவெளியில் 1 முதல் வரிசையாக எண்கள் தெரியும். இந்த எண்கள்  ஒவ்வொன்றும் அங்குலத்தையோ அல்லது சென்டிமீட்டரையோ குறிப்பிடும். 
எவ்வளவு இடம் வெண்மையாக தெரிகிறதோ அந்த அளவுக்குத்தான் வாசகங்கள் அமையும்.  அதற்க்கு மேலே போகும்போது தானாகவே மடிந்து அடுத்த வரிசைக்கு சென்றுவிடும். Ruler ல் இடது பக்கத்தில் வண்ணத்தில் தெரிவது இடது பக்க இடைவெளியாகும். (Left Margin).  Ruler ல் வலது  பக்கத்தில் வண்ணத்தில் தெரிவது  பக்க இடைவெளியாகும். (Right Margin). இவைகளை Ruler ல் இடது மற்றும் வலது பக்கங்களில் கீழ்ப் பகுதியில் காணப்படும் சிறு நகர்ப்பன்களை கொண்டு சரி செய்யலாம். 


உங்கள் திரையில் ரூலர் தெரியவில்லைஎன்றால் View என்ற Tab ய் தேர்வு செய்யவும். அதில் Show/Hide என்ற குழுவிலுள்ள   Ruler என்ற மெனுவை தேர்ந்தெடுத்து அந்த கட்டத்தை சொடுக்கவும்  (tick mark) செய்யவும். 

No comments:

Post a Comment