Total Pageviews

Friday, 5 May 2017

MS WORD - AUTO CORRECT OPTION

MS WORD – Auto correct option

Ms Office தொகுப்பில் ஒரு சிறப்பம்சம் அதனுடைய Autocorrect option ஆகும்.  இது நாம் தவறாக தட்டச்சு செய்யும் சொற்களை தானாகவே சரி செய்யும் தன்மையுடையது. தட்டச்சு செய்யும்போது வாக்கியத்தின் முதல் எழுத்தை தானாகவே capitalize (பெரிய எழுத்தாக மாற்றிவிடும்.  சுருக்கச் சொற்களை அளித்தால் தானாகவே அதற்குரிய வடிவத்தில் அமைத்துவிடும். உதாரணத்திற்கு dds. என தட்டச்சு செய்தால் மென்பொருள் Deputy Director of Economics and Statistics, Chennai – 600 006. என்று பதிவிடும்.  இம்மாதிரி எவ்வளவு சொற்களை வேண்டுமானாலும் நாம் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இதற்க்கு Autocorrect option ல் சில மாறுதல்களை செய்யவேண்டும்.  அதை எப்படி செய்வது ? கீழே காணலாம்.


1.       Office Button ஐ கிளிக் செய்யவும். இப்போது வரும் மெனுவின் கீழ் Word option என்ற கட்டம் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

2.      இப்போது வந்துள்ள மெனுக்கள் இரு பகுதியாக இடது வலமாக அமைந்திருக்கும். இடது பகுதியில் இருக்கும் ஒவ்வொரு மெனுவையும் தேர்வு செய்யும்போது அதற்குரிய மெனுக்கள் வலது புறத்தில் தெரியும்.

3.      இடது புறம் இருக்கும் மெனுக்களில் Proofing என்ற மெனுவை தேர்ந்தெடுக்கவும்.

4.      வலது புறத்தில் Autocorrect Options கட்டத்தில் சொடுக்கவும்.


தற்போது Auto Correct Option உரையாடல் பெட்டி தோன்றும். 



முதலில் Replace என்ற கட்டத்தில் எந்த சுருக்கெழுத்துக்களை பயன்படுத்த்தப்போகிறோமோ (உம். dds) அவற்றை தட்டச்சு செய்யவும்.  எப்போதும் சுருக்கெழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒரு புள்ளி வைப்பது நல்லது.  அடுத்து with என்ற கட்டத்தில் அதற்க்கு எண்ண விரிவு வேண்டுமோ அவற்றை தட்டச்சு செய்ய வேண்டும். பின்பு Add என்ற கட்டத்தில் சொடுக்க வேண்டும். இப்போது நீங்கள் தட்டச்சு செய்தவைகள் அட்டவணையில் சேர்ந்துவிடும்.


இப்போது OK என்ற கட்டத்தில் சொடுக்கவும். தற்போது Auto Correct Option உரையாடல் பெட்டி மறைந்துவிடும். இப்போது Word Option உரையாடல் பெட்டி இருக்கும். அதில் உள்ள OK என்ற கட்டத்தில் சொடுக்கவும். 



 இப்போது நீங்கள் Auto Correct Option உரையாடல் பெட்டியில் செய்த மாற்றங்கள் அதில் நிரந்தரமாக இருக்கும். இனி எப்போது  dds. என தட்டச்சு செய்தாலும்  மென்பொருள் Deputy Director of Economics and Statistics, Chennai – 600 006. என்று பதிவிடும். இந்த வசதியை பயன்படுத்தி நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் வாக்கியங்களையும் சொற்களையும் இதில் பதிவிட்டு பயன்படுத்தலாம்.

(ஓர் நல்ல அறிவுரை:  டெரெக் பிரவுன் என்ற நண்பர் ஓர் இணைய தளத்தில் கூறியுள்ளார் அவர் sw என்ற எழுத்துக்களை switch என்பதற்கும் sww என்ற எழுத்துக்களை switches என்பதற்கும் யன்படுத்துவதாக கூறியுள்ளார். மேலும் என்ற எழுத்தை ing என்பதற்கு சேர்ப்பதாகவும் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ள சில உதாரணங்களை பார்ப்போம். cfm என்பது confirm என்பதற்கும் cmf6 என்பது confirming  என்பதற்கும் cmfd என்பது confirmed  என்பதற்கும் cmfn  என்பது confirmation  என்பதற்கும் m  என்பது ment   என்பதற்கும் உபயோப்படுத்தலாம்.  அவருடைய தகவல்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.)

No comments:

Post a Comment