Total Pageviews

Saturday, 29 April 2017

MS WORD - Short cuts



SHORT CUT
உபயோகம்
இடது பக்க அம்புக்குறி
இடது பக்கமாக ஒரு எழுத்துக்கு கர்சரை நகர்த்த
வலது  பக்க அம்புக்குறி
வலது பக்கமாக ஒரு எழுத்துக்கு கர்சரை நகர்த்த
மேல் நோக்கிய அம்புக்குறி
கர்சரை ஒரு வரி மேலே நகர்த்த
கீழ்  நோக்கிய அம்புக்குறி
கர்சரை ஒரு வரி கீழே  நகர்த்த
CTRL +
கர்சர் ஒரு சொல் முன்னே செல்ல  
CTRL +
கர்சர் ஒரு சொல் பின்னே செல்ல  
CTRL +
கர்சர் ஒரு பத்தி முன்னே செல்ல  
CTRL +
கர்சர் ஒரு பத்தி பின்னே  செல்ல  
Page Up
திரையில் ஒரு பக்கம் முன்னே செல்ல
Page Down
திரையில் ஒரு பக்கம் பின்னே செல்ல
Alt + CTRL + Page Up
கர்சர் திரையின் ஆரம்பத்திற்கு செல்ல
Alt + CTRL + Page Down
கர்சர் திரையின் கடைசிக்கு செல்ல
CTRL + Page Up
முன் பக்கத்தின் ஆரம்பத்திற்கு செல்ல
CTRL + Page Down
அடுத்த  பக்கத்தின் ஆரம்பத்திற்கு செல்ல
HOME
அந்த வரியின் ஆரம்பத்திற்கு செல்ல
END
அந்த வரியின் கடைசிக்கு செல்ல  
CTRL + HOME
கோப்பின்  ஆரம்பத்திற்கு செல்ல
CTRL + END
கோப்பின்  கடைசிக்குச்  செல்ல
Shift F5
இதற்க்கு முன் கர்சர் எங்கு இருந்ததோ அங்கு செல்ல


CTRL  + D     (FONT)
எழுத்துரு சம்பந்தமாக அனைத்து மெனுக்களையும் பார்க்கவும் தேர்ந்தெடுக்கவும்
CTRL  + SHIFT + P    (FONT SIZE )
எழுத்துரு அளவை தேர்ந்தெடுக்க
CTRL  + SHIFT + .    (FONT SIZE )
எழுத்துரு அளவை இரண்டு இரண்டாக  அதிகரிக்க  
CTRL  + SHIFT + ]   (FONT SIZE )
எழுத்துரு அளவை ஒவொன்றாக   அதிகரிக்க
CTRL  + SHIFT + [  (FONT SIZE )
எழுத்துரு அளவை ஒவொன்றாக  குறைக்க
CTRL  + B    (Bold)
தேர்ந்தெடுத்த உரையை அழுத்தமாக காண்பிக்க
CTRL  + I    (Italic)
தேர்ந்தெடுத்த உரையை சாய்வு எழுத்துக்களாக காண்பிக்க
CTRL + U    (Underline)
தேர்ந்தெடுத்த உரையை அடிக்கோடிட
CTRL + BIU
தேர்ந்தெடுத்த உரையை அழுத்தமாகவும்  சாய்வு எழுத்துக்களாகவும் காண்பித்து  அடிக்கோடிட
CTRL + SHIFT + D
இரட்டை அடிக்கோடிட

CTRL + A    (Select all) or Triple  Click On the left margin
கோப்பு முழுவதையும் தேர்ந்தெடுக்க
சொல்லின் மீது Double Click
சொல்லை தேர்ந்தெடுக்க
Click On the left margin
அந்த வரியை தேர்ந்தெடுக்க
சொல்லின் மீது Triple Click or Double Click On the left margin
அந்த பத்தியை தேர்ந்தெடுக்க
Shift + End
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து வரி முடிவு வரை தேர்ந்தெடுக்க
Shift + Home
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து வரி ஆரம்பம் வரை தேர்ந்தெடுக்க
CTRL + End
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து கோப்பு  முடிவு வரை தேர்ந்தெடுக்க
CTRL + Home  
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து கோப்பு  ஆரம்பம்  வரை தேர்ந்தெடுக்க
CTRL + SHIFT +
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து அடுத்த சொல்  வரை தேர்ந்தெடுக்க
CTRL + SHIFT +
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து அதற்க்கு முன் சொல்  வரை தேர்ந்தெடுக்க
SHIFT +
கீழ்புறமாக ஒரு வரியை தேர்ந்தெடுக்க
SHIFT +
மேல்புறமாக ஒரு வரியை தேர்ந்தெடுக்க
CTRL +SHIFT +
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து பத்தி முடிவுவரை தேர்ந்தெடுக்க
CTRL +SHIFT +
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து பத்தி ஆரம்பம்  வரை தேர்ந்தெடுக்க
SHIFT + Page Up
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து திரையின்  ஆரம்பம்  வரை தேர்ந்தெடுக்க
SHIFT + Page Down
கர்சர் இருக்கும் இடத்திலிருந்து திரையின் முடிவு  வரை தேர்ந்தெடுக்க

இடைவெளி விடுதல் (Margins) 

CTRL + L (Left Alignment)
இடது புறம் ஒரே சீராக அமைய 
CTRL + R (Right Alignment)
வலது புறம் ஒரே சீராக அமைய
CTRL + J  (Justification)
இரு புறம் ஒரே சீராக அமைய 
CTRL + E (Center)
உரை நடுவில் அமைய
நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஒட்டுதல் (Copy, Cut and Paste)
CTRL + C (Copy)
நகலெடுக்க
CTRL + X  or Shift + Del (Cut)
வெட்ட (நீக்க)
CTRL + V or Shift + Insert (Paste)
ஓட்ட
வரிகளுக்கிடையில் இடைவெளி விடுதல் 
CTRL + 1
1   வரி இடைவெளி 
CTRL + 2
2   வரி இடைவெளி 
CTRL + 5
1 1/2  வரி இடைவெளி 

Thursday, 27 April 2017

MS WORD - COPY AND PASTE


உரையை நகல் எடுத்து ஒட்டுதலும், வெட்டி ஒட்டுதலும் (COPY, CUT AND PASTE)


அறிக்கை போன்றவைகளை தயாரிக்கும்போது அதன் முடிவில் அந்த அறிக்கையின் சாரம்சத்தை (summary) கூறுவோம் .  அதில் அந்த அறிக்கையில் விவாதித்திருக்கும் முக்கிய கருத்துக்களை எடுத்து திரும்பவும் வரிசைப்படுத்துவோம்.  அதுமாதிரி செய்யும்போது உரையில் அந்த கருத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.  பின்பு HOME TAB-ல் CLIPBOARD என்ற குழுவில் உள்ள COPY என்ற BUTTON ஐ சொடுக்க வேண்டும். இப்போது நாம் எந்த சொற்களை / வரிகளை / பத்திகளை தேர்ந்தெடுத்து நகல் எடுத்துள்ளோமோ அந்த உரையின் பகுதி கணிப்பொறியில் உள்ள நினைவகத்தில் பதிவாகியிருக்கும். இப்போது கர்சரை உரையில் எந்த பகுதியில் இதை பதிவு செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு கர்சரை கொண்டு சென்று சொடுக்குங்கள். பின்பு HOME TAB-ல் CLIPBOARD என்ற குழுவில் உள்ள PASTE  என்ற BUTTON ஐ சொடுக்க வேண்டும்.

(மாற்று  வழி: 1. உரையை தேர்ந்தெடுத்த   பின்பு மவுசில் வலது பக்க BUTTON ஐ சொடுக்கி வரும் மெனுவில் COPY என்பதில் சொடுக்கவும்.  எந்த பகுதியில் இதை பதிவு செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு கர்சரை கொண்டு சென்று மவுசில் வலது பக்க BUTTON ஐ சொடுக்கி வரும் மெனுவில் PASTE என்பதில் சொடுக்கவும். அல்லது SHORT CUT – நகலெடுக்க CTRL ஐ அழுத்திக்கொண்டு C ஐ அழுத்தவும் . ஓட்ட வேண்டிய இடத்தில் CTRL ஐ அழுத்திக்கொண்டு V ஐ அழுத்தவும்

இதுவரையில் நாம் பார்த்தது நகலெடுத்து ஓட்டுவது எப்படி. இனி நாம் பார்க்கப்போவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் / சொற்றொடர் / வாக்கியங்கள் அல்லது பத்திகள் இவைகளை எப்படி வெட்டி ஓட்டுவது ? (CUT and PASTE).

சில சமயங்களில் உரையை எழுதிவிட்டு படித்துப் பார்க்கும்போது சில சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ அல்லது பத்திகளையோ முன் பின்னாக மாற்றிப் போட்டால் நன்றாக இருக்கும்போல் தோன்றும்.  அந்த சமயங்களில் உரையின் எந்தப் பகுதியை மாற்ற விரும்புகிறோமோ அந்தப் பகுதியை தேர்ந்தெடுத்து HOME TAB-ல் CLIPBOARD என்ற குழுவில் உள்ள CUT   என்ற BUTTON ஐ சொடுக்க வேண்டும். பின்பு HOME TAB-ல் CLIPBOARD என்ற குழுவில் உள்ள PASTE  என்ற BUTTON ஐ சொடுக்க வேண்டும்.

(மாற்று  வழி: 1. உரையை தேர்ந்தெடுத்த   பின்பு மவுசில் வலது பக்க BUTTON ஐ சொடுக்கி வரும் மெனுவில் CUT என்பதில் சொடுக்கவும்.  எந்த பகுதியில் இதை பதிவு செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு கர்சரை கொண்டு சென்று மவுசில் வலது பக்க BUTTON ஐ சொடுக்கி வரும் மெனுவில் PASTE என்பதில் சொடுக்கவும்) (SHORT CUT – நகலெடுக்க CTRL ஐ அழுத்திக்கொண்டு X ஐ அழுத்தவும் . ஓட்ட வேண்டிய இடத்தில் CTRL ஐ அழுத்திக்கொண்டு V ஐ அழுத்தவும்)