Total Pageviews

Tuesday, 11 July 2017

MS EXCEL - TIME CALCULATION


TIME CALCULATION


எப்படி தேதியை பதிவு செய்ய DATE(YEAR,MONTH,DAY)  என்ற செயல்பாட்டை பயன்படுத்த முடியுமோ அதேபோல நேரத்தை பதிவு செய்ய TIME(HOUR,MINUTE,SECONDS) என்ற செயல்பாட்டை (FUNCTION) பயன்படுத்தலாம்.  நேரடியாகவும் பதிவு செய்யலாம். உம். =TIME(14,26,5) விடை 14:26

தேதி பதிவு செய்யும்போது இன்றைய தேதியை ஒரு செல்லில் பதிவு செய்ய =TODAY() என்று தட்டச்சு செய்யவேண்டும்.  இன்றைய தேதியுடன் நேரமும் சேர்ந்து வரவேண்டும் என்றால் =NOW().என்று தட்டச்சு செய்யவேண்டும். நேரம் மட்டும் வேண்டுமென்றால் =HOUR(NOW()) என்றும் நிமிடங்கள் மட்டும் வேண்டுமென்றால் =MINUTE(NOW()) என்றும் தற்போதுள்ள நேரம் மட்டும் வேண்டுமென்றால் =TIME(HOUR(NOW()),MINUTE(NOW()),SECOND(NOW())) என்றும் தட்டச்சு செய்யவேண்டும்.






எக்ஸ்செல்லில் நேரடியாக நேரங்களை பதிவு செய்யவும் அதன் அடிப்படையில் சில கணக்கீடுகளை செய்யவும் முடியும்.  நேரங்களை பதிவு செய்யும்போது மணிக்கும் நிமிடங்களுக்கும் இடையில் : (colon) இடவேண்டும். உம். 1:30, 21:30, 12:50. மணிக்கும் நிமிடங்களுக்கும் இடையில் புள்ளி வைப்பது தவறான முறையாகும் 21.30, 12.50.  நேரத்தை பதிவு செய்ய 24  மணிநேர முறையையோ அல்லது AM PM முறையையோ பயன்படுத்தலாம். AM PM முறையை பயன்படுத்தும் போது AM / PM க்கு முன்னால்  ஒரு இடைவெளி விடவேண்டும். (உம். 9:30 PM, 12:50 PM, 10:00 AM). இரண்டு நேரங்களுக்கு இடையிலான நேரம் எவ்வளவு என்று கணக்கிடுதலை கீழே காணலாம். (ஒரு நேரத்திலிருந்து மற்றொரு நேரத்தை கழிக்க)


நேரங்களை ஒன்றோடொன்று கூட்டவும் முடியும்.


இப்படி கூட்டும்போது கூட்டுத்தொகை 24  மணி நேரத்திற்குள் வரும்போது சரியாக இருக்கும்.  24  மணி நேரத்தை தாண்டும்போது கூட்டுத்தொகையை சரியாக காண்பிக்காது.  ஆதலால் கூட்டுத்தொகை வரும் செல்லை FORMAT செய்யவேண்டும்.


இதனுடைய கூட்டுத்தொகை 33:15 என்று வரவேண்டும்.  செல்லை FORMAT செய்ய செல்லில் கர்சரை வைத்து RIGHT CLICK செய்யவும்.  வரும் மெனுவில் FORMAT CELLS என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்போது FORMAT CELL க்கான உரையாடல் பெட்டி தோன்றும் அதில் NUMBER என்ற தலைப்பின் கீழ் உள்ள பெட்டியில் CUSTOM என்பதை CLICK செய்யவும்.  வரும் பெட்டியில் TYPE என்ற தலைப்பின் கீழ் உள்ளத்தில் சதுர அடைப்புக்குறிக்குள் HH என்று தட்டச்சு செய்து : (colon) க்கு பக்கத்தில் MM என்று தட்டச்சு செய்து OK கொடுத்து வெளியேறவும். [HH]:MM 



சரியான விடை


ஒரு தொழிற்சாலையில் பணியாளர்களின் வாராந்திர வேலை நேரத்தை கணக்கிடுதலை கீழே உள்ள உதாரணத்தின் மூலம் காணலாம்.




ஒரு நிகழ்ச்சிக்கு வந்துள்ள நபர்களின் நேரம்

8:40
8:05
6:35
9:05
7:30
8:30
10:30
8:45
9:15
9:10
8:15

மேற்கண்டவாறு அமைந்துள்ளதாக கொள்வோம். இவர்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தவர்கள் எத்தனை பேர் கண்டுபிடிக்க COUNTIF என்ற FUNCTION ஐ உபயோகித்து கண்டுபிடிக்கலாம்.  =COUNTIF(A1:A11,">=08:30")-COUNTIF(A1:A11,">09:00") அல்லது   =COUNTIF(A1:A11,">="&TIME(8,30,0))-COUNTIF(A1:A11,">"&TIME(9,0,0)). (இவற்றில் முதல் பகுதியில் 8:30 மேல் வந்தவர்கள் எத்தனை பேர் என்று கண்டுபிடித்து அதை 09:00 மேல் வந்தவர்கள் எண்ணிக்கையிலிருந்து கழிக்கிறோம்.)


     முதலில் உள்ள செயல்பாட்டில் நேரத்தை நேரடியாக தட்டச்சு செய்துள்ளோம். இரண்டாவதில் நேரத்தை TIME FUNCTION மூலம் கொடுத்துள்ளோம். கீழுள்ள உதாரணத்தில் பல முறைகள் விளக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment