Sheet Linking and Book Linking Part - I
Sheet Linking என்பது ஒரு ஷீட்டில் உள்ள செல்களில் உள்ள மதிப்புகளை மற்றொரு ஷீட்டின் மதிப்புகளோடு கூட்டுவது (கழிப்பது, பெருக்குவது, வகுப்பது அல்லது இணைப்பது) என்பதை குறிப்பிடுவதாகும். தற்போது கீழுள்ள உதாரணத்தை கவனிப்போம். இதில் மூன்று மாதங்களுக்கான செலவீனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளைக்கூட்டி மொத்தம் என்று குறிப்பிட்டுள்ள பத்தியில் பதியவேண்டும். இந்த மூன்று மாத கணக்குகளை பார்த்தால் அவைகளின் வடிவம் (Format ) ஒரே மாதிரியாக இல்லை. ஜனவரியில் சம்பளம் முதலில் உள்ளது. பிப்ரவரியிலும் மார்ச் மாதங்களிலும் வாடகை முதலில் உள்ளது. கூட்டுமிடத்தில் வாடகை முதலில் உள்ளது. இது போலவே மற்ற இடங்களிலும் உள்ளது .

எனவே (வாடகை) கூட்டுமிடத்தில் கர்சரை வைத்து = என்ற பொத்தானை
அழுத்தவும். பின்பு ஜனவரி மாத வாடகை இருக்குமிடத்தில் கர்சரை வைக்கவும். இப்போது உங்கள் Formula Bar ல் =B4 என்றிருக்கும். இப்போது + என்ற பொத்தானை அழுத்தி பிப்ரவரி மாத வாடகை இருக்குமிடத்தில் கர்சரை வைக்கவும், உங்கள் Formula Bar ல் =B4+E3 என்றிருக்கும்., மறுபடியும் + என்ற பொத்தானை அழுத்தி மார்ச் மாத வாடகை இருக்குமிடத்தில் கர்சரை வைக்கவும், தற்போது Formula Bar ல் =B4+E3+H3 என்றிருக்கும். இனிமேல் கூட்ட வேண்டியது ஒன்றும் இல்லாததால் Enter கீயை அழுத்தவும். தற்போது K3 ல் கூட்டுத் தொகை வந்திருக்கும். இதேபோல் மற்ற செல்களுக்கும் செய்யவும்.
இதுவே எல்லா மாத செலவு பட்டியல்களும் ஒரே மாதிரியாக இருந்தால் கூட்டுமிடத்தில் முதலில் உள்ள செல்லில் =B3+E3+H3 என்று தட்டச்சு செய்து Enter கீயை அழுத்தினால் கூட்டுத்தொகை வந்துவிடும். அதை அப்படியே மற்ற செல்களுக்கும் நகல்(copy) செய்து விடலாம்.
வேறு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
மேலுள்ள ஷீட்டில் உள்ள விவரங்கள் Format எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. மதிப்புகள் மட்டும் வெவ்வேறு மாதிரியாக உள்ளன. Total Expenses என்ற செல்லில் எல்லாவற்றின் கூட்டுத்தொகையை கொண்டு வரவேண்டும். கூட்டுத்தொகையை கொண்டு வரவேண்டிய செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு முன்பு சென்ற உதாரணத்தில் கூட்டியதுபோல் கூட்டவேண்டும் (=C3+F3+I3+L3+O3+R3+C10+F10+I10+L10+O10+R10). இதை கீழுள்ள செல்களுக்கும் நகல் செய்யவேண்டும்.
இதையே மற்றொரு விதமாக சுலபமாகவும் செய்யலாம்.
கூட்டுத்தொகை வரவேண்டிய செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு =Sum( என்று தட்டச்சு செய்து C3 யிலிருந்து R3 வரையிலும் select செய்யுங்கள் பின்பு ஒரு கமா (,) வைத்து C10 லிருந்து R10 வரையிலும் select செய்து என்டர் கீயை அழுத்தவும். இதை மற்ற செல்களுக்கு நகல் செய்யவும்.
மேல் உள்ள உதாரணத்தில் 12 மாத பட்டியலும் ஒரே பக்கத்தில் உள்ளது இதுவே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஷீட்டில் இருப்பதாக கொள்வோம். உதாரணத்திற்கு இரண்டு மாத பட்டியலின் ஷீட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதைப்போல் 12 ஷீட்களிலும் உள்ளது. 13வது ஷீட்டில் இதனுடைய மொத்தத் தொகை கொடுக்கப்படும். இந்த ஷீட்களை கவனித்தீர்களானால் ஒவ்வொரு மாத பட்டியலும் B2 என்கிற செல்லில் ஆரம்பித்து C7 என்கிற செல்லில் முடிவடைகிறது. தொகைகள், மாத பெயர்களை தவிர மற்ற format கள் ஒன்றாகவே உள்ளன. இம்மாதிரியான இருக்கும் பட்சத்தில் இவைகளை கூட்டுவதற்கு Total என்ற ஷீட்டில் Food க்கு அருகில் உள்ள செல்லில் கர்சரை வைத்து = Sum( என்று தட்டச்சு செய்து Jan ஷீட்டில் C3 கர்சரை கிளிக் செய்யவும். இப்போது Formula Bar ல் ==SUM(jan!C3 என்று தெரியும். + என்று தட்டச்சு செய்து Feb ஷீட்டில் C3 கர்சரை கிளிக் செய்யவும், இப்போது Formula Bar ல் =SUM(jan!C3+feb!C3 இது போல் டிசம்பர் மாதம் வரையில் செய்து முடித்தது என்டர் கீயை அழுத்தவும் .

இப்போது Total ஷீட்டில் C3 ல் =SUM(jan!C3+feb!C3+mar!C3+apl!C3+may!C3+jun!C3+jul!C3+aug!C3+sep!C3+oct!C3+nov!C3+dec!C3) என்று தெரியும்.
(ஷீட்களில் உள்ள தகவல்களை கூட்டும்போது =Sum(ஷீட் பெயர் exclamation மார்க் செல் அட்ரஸ் + என்று கொடுக்கவேண்டும். மேலுள்ள படத்தை கவனிக்கவும். ). இதை வேறு விதமாகவும் சுலபமாக எழுதலாம். =SUM(jan:dec!C3) என்றும் எழுதலாம். அதாவது =Sum(ஆரம்ப ஷீட்டின் பெயர் : முடிவு ஷீட்டின் பெயர் exclamation mark செல் அட்ரஸ்). என்டர் செய்து மற்ற செல்களுக்கு நகல் செய்யவும்.