வாட்டர் மார்க்
வாட்டர் மார்க் என்பது நம்முடைய கோப்பில் உள்ள
பக்கங்களில் உள்ள விவரங்களுக்கு பின்புலமாக ஒரு நீரோட்டம் போல் ஒரு படத்தையோ
அல்லது சொற்களையோ அமைப்பதாகும். வாட்டர் மார்க் என்பது படங்களாகவும் (GRAPHICS) இருக்கலாம் அல்லது வெறும் வார்த்தைகளாகவும் (TEXT) இருக்கலாம். இவை அமைந்திருக்க கூடிய டாக்குமெண்டை பற்றி சில
எச்சரிக்கைகளாகவோ அல்லது அறிவுறுத்தளாகவும் இருக்கலாம் உதாரணமாக CONFIDENCE என்று யாருக்கும் தெரிவிக்க கூடாது என்ற செய்தியில்
இருக்கலாம் அல்லது இதை நகல் எடுக்கக் கூடாது DO
NOT COPPY என்று
இருக்கலாம் இது மாதிரியான விஷயங்களை தெரிவிக்கலாம் அல்லது இது எந்த நிறுவனத்தை
சேர்ந்தது என்று அதனுடைய படங்களை காட்டி இருக்கலாம். நமது அரசு ஆவணங்களில் கூட சிலவற்றில் அரசின் சின்னம் இருக்கும் (GOVT
EMBLEM) அதற்கு மேல்
அந்த வார்த்தைகள் அமைந்தது போல் இருக்கும் கோர்ட்டில் கொடுக்கக்கூடிய
தீர்ப்புகளில் உள்ளீடாக சில நீரோட்டங்கள் இருக்கும் அது எந்த கோர்ட்டில் இந்த
தீர்ப்பு வழங்கப்பட்டது என்று தெரிவிப்பதாக இருக்கும் அல்லது வாசகங்கள் இருக்கும்.வாட்டர் மார்க்
என்பது நம்முடைய கோப்பில் உள்ள பக்கங்களில் உள்ள விவரங்களுக்கு பின்புலமாக ஒரு
நீரோட்டம் போல் ஒரு படத்தையோ அல்லது சொற்களையோ அமைப்பதாகும். வாட்டர் மார்க் என்பது படங்களாகவும் (GRAPHICS) இருக்கலாம் அல்லது வெறும் வார்த்தைகளாகவும் (TEXT) இருக்கலாம். இவை அமைந்திருக்க கூடிய டாக்குமெண்டை பற்றி சில
எச்சரிக்கைகளாகவோ அல்லது அறிவுறுத்தளாகவும் இருக்கலாம் உதாரணமாக CONFIDENCE என்று யாருக்கும் தெரிவிக்க கூடாது என்ற செய்தியில்
இருக்கலாம் அல்லது இதை நகல் எடுக்கக் கூடாது DO
NOT COPPY என்று
இருக்கலாம் இது மாதிரியான விஷயங்களை தெரிவிக்கலாம் அல்லது இது எந்த நிறுவனத்தை
சேர்ந்தது என்று அதனுடைய படங்களை காட்டி இருக்கலாம். நமது அரசு ஆவணங்களில் கூட சிலவற்றில்
அரசின் சின்னம் இருக்கும் (GOVT
EMBLEM) அதற்கு மேல்
அந்த வார்த்தைகள் அமைந்தது போல் இருக்கும் கோர்ட்டில் கொடுக்கக்கூடிய
தீர்ப்புகளில் உள்ளீடாக சில நீரோட்டங்கள் இருக்கும் அது எந்த கோர்ட்டில் இந்த
தீர்ப்பு வழங்கப்பட்டது என்று தெரிவிப்பதாக இருக்கும் அல்லது வாசகங்கள் இருக்கும்.
எந்த
கோப்பில் படத்தையோ வார்த்தைகளையோ
பின்புலமாக வைக்க வேண்டுமோ அவற்றை திறந்து வைத்துக் கொள்ளவும்
Design என்ற TAB ல் PAGE BACKGROUND என்ற GROUPல் Water Mark ஒரு COMMAND
BUTTON அல்லது ICON ஆக தென்படும். அதை தேர்வு செய்யவும்
.
கீழ்க்கண்ட விதமாக Default வாட்டர் மார்க்குகள் தோன்றும். 


அதில் default ஆக
Confidential 1, Confidential 2, Do Not Copy 1, Do Not Copy 2, Draft 1, Draft 2, Sample 1, ASAP 1, ASAP2, Urgent 1 and Urgent 2 water marks கிடைக்கும்.
தேவைக்கு ஏற்றார்போல் இருந்தால் மேற்க்கண்டவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் More Watermarks from Office.com என்பவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதுவும் சரியாக வரவில்லை என்றால் Custom Watermark .. என்ற மெனுவை தேர்ந்தெடுத்தால் ஒரு Dialog Box தோன்றும். இதன் மூலம் ஒரு படத்தையோ அல்லது சில சொற்களையோ Watermark ஆக உருவாக்கலாம்
ஒரு படத்தை watermark ஆக உருவாக்க Picture Watermark என்ற மெனுவை தேர்ந்தெடுக்கவும். Select Picture என்ற மெனு மூலம் படம் எங்கிருக்கிறதோ அந்த Folder சென்று படத்தை தேர்வு செய்யவும். அப்படியில்லாமல் ஏதாவது சொற்களை Watermark ஆக உருவாக்க வேண்டுமென்றால் Text Watermark என்ற மெனுவை தேர்ந்தெடுக்கவும். Text என்ற பெட்டியில் தேவையான சொற்களை தட்டச்சு செய்யவும். Font பெட்டியின் மூலம் தேவையான எழுத்துருவையும் Size பெட்டியின் மூலம் தேவையான அளவையும் தேர்ந்தெடுக்கவும். எழுத்துக்களுக்கு வண்ணம் தேவையென்றால் அதையும் தேர்வு செய்யவும். மேலும் அந்த சொற்கள் கோண வரியாக அமைய வேண்டுமா அல்லது படுக்கை வாட்டமாக அமைய வேண்டுமா என்பதையும் தேர்வு செய்து Apply என்ற பட்டனை சொடுக்கவும். பின்பு ok கொடுத்து வெளியேறவும்.
வாட்டர் மார்க்குகளை கோப்பில் இணைக்கும்போது அது அந்த கோப்பில் உள்ள அனைத்து பக்கங்களிலும் நீரோட்டமாக தெரியும் . சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட சில பக்கங்களில் மட்டும் இணைத்தால் போதும். உதாரணமாக ஒரு பக்கத்தில் செய்தியை மட்டும் ரகஸ்யமாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட வேண்டும்மென்றால் அந்த பக்கத்தில் கர்சரை வைத்து, குறிப்பிட்ட வாட்டர்மார்க்கை தேர்வு செய்து right click (மவுசில் வலது பட்டனை சொடுக்கி insert current document position என்ற மெனுவை தேர்வு செய்யவும்
இவற்றில் இல்லாத ஒரு புது வாட்டர்மார்க்கை தயார் செய்து அது எபோதும் MS WORD ல் வாட்டர்மார்க் மெனுவில் தெரிய வேண்டுமென்றால் கீழ் வரும் முறைகளை கடைபிடிக்கவும்.
1. புதியதாக ஒரு கோப்பினை
உருவாக்கவும் .
2. Insert என்ற மெனுவில் Header & Footer என்ற குழுவில் உள்ள Header என்ற மெனுவை தேர்வு செய்யவும்.
3. வரும் மெனுக்களில் Blank என்ற முதல் மெனுவை தேர்ந்தெடுத்து அதில் [Type] என்பதை அழித்து விடவும்
. insert ல் WordArt மெனுவை தேர்வு செய்து Your Text என்ற பெட்டியில உங்களுக்கு தேவயான சொற்களை தட்டச்சு செய்து எழுத்துருவையும் அதன் அளவையும் தேர்வு செய்யவும் .
2. WordArt பெட்டியை பக்கத்தின் அளவிற்கு பெரிதுபடுத்தவும்.
3. தேவையென்றால் சாய்மானத்தை செய்யவும் .
4. அந்த பக்கம் முழுமையாக select செய்து Insert மெனுவில் Text குழுவில் உள்ள Quick Parts என்ற மெனுவை தேர்வு செய்யவும்








