சில
சமயங்களில் அலுவலகத்திலிருந்தோ அல்லது நமது சொந்த விஷயமாகவோ (உம் . திருமண
அழைப்பிதழ்கள் அனுப்புதல்) ஒரே கடிதத்தை E-MAIL மூலம் பல நபர்களுக்கு அனுப்ப
வேண்டியிருக்கும். பல
நேரங்களில் அலுவலகத்தில் இம்மாதிரியான வேலைகள் வரும். அம்மாதிரியான நேரங்களில் E-MAIL ல் ஒவ்வொரு ID யாக தட்டச்ச்சு செய்ய வேண்டி வரும்.
ஒவ்வொரு தடவையும் இம்மாதிரி தட்டச்சு செய்வதற்கு பதிலாக யார் யாருக்கெல்லாம்
கடிதங்களை அனுப்பவேண்டிவருமோ அவர்களுடைய ID களை மொத்தமாக ஒரு குழுவாக (GROUP)
சேமித்தது வைத்துக்கொண்டால் ஒரே
தேர்வில் அனைவருக்கும் அனுப்பிவிடலாம்.
வழி முறைகள் :
1.
உங்கள்
E-MAIL அடையாளம் (ID)
மற்றும் கடவுச்சொல் (PASS WORD )
கொடுத்து திறந்து கொள்ளவும்.
2.
கீழே
உள்ள படத்தில் காட்டியுள்ளது போல் 9 புள்ளிகள் கொண்ட GOOGLE APPS யை கிளிக் செய்யவும்.
3. இரண்டாவது படத்தில் உள்ளபடி CONTACTS என்ற APP ஐ தேர்வு செய்யவும்
3. இரண்டாவது படத்தில் உள்ளபடி CONTACTS என்ற APP ஐ தேர்வு செய்யவும்
கீழே உள்ளது போன்று ஒரு திரை தோன்றும்.
அதில் Create lable என்ற மெனுவை தேர்வு செய்யவும்
இப்போது Create label என்ற உரையாடல் பெட்டி தோன்றும். அதில் நீங்கள்
உருவாக்கப்போகும் குழுவிற்கு பொருத்தமான ஒரு பெயரை தட்டச்சு செய்து Save என்ற பொத்தானை அழுத்தவும்.
இப்போது
நீங்கள் குறிப்பிட்ட பெயரில் ஒரு குழு உருவாக்கப்பட்டு விட்டது. இதில் யாருடைய id
ஐ இணைக்கவேண்டுமோ அவருடைய contact
ல் கிளிக் செய்யவும் . கீழே உள்ளதுபோல் நீங்கள் தேர்வு
செய்தவருக்குரிய பெட்டி தோன்றும்.
அதில் வலது பக்கத்தில் ஒன்றின் கீழ் ஒன்றாக மூன்று புள்ளிகள் தென்படும்.
அதை தேர்வு செய்யவும். படத்தில் உள்ளமாதிரி change
labels என்ற தலைப்பின் கீழ்
நீங்கள் உருவாகியுள்ள குழுவின் பெயர் தெரியும். அதை தேர்வு செய்யவும். இப்போது இந்த id குழுவில் சேர்ந்ததற்கு அடையாளமாக ஒரு
டிக் தெரியும்.







