Total Pageviews

Saturday, 11 January 2020

MACRO -3 ல் FOR NEXT LOOP ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை பார்த்தோமல்லவா, அந்த FOR AND LOOP கள் மூலம் பயனுள்ள சில மேக்ரோ க்களை இப்போது பார்ப்போம். MS WORD ல் சிறிய எழுத்தில் உள்ள சொற்களை பெரிய எழுத்தில் மாற்றுவதற்கும் மற்ற சில செயல்களுக்கும் CHANGE  CASE என்ற செயலி உள்ளது. எக்செல்லில் அதற்கு ஈடான FUNCTION எதுவும் இல்லை.  உதாரணத்திற்கு A1 ல் srinivasan என்றுள்ளது. இதை பெரிய எழுத்தில் மாற்ற வேண்டுமென்றால் மற்றொரு செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு =Upper(A1) என்று கொடுக்க வேண்டும். பின்பு இதை நகல் எடுத்து A1 ல் Paste Special Value வாக ஓட்டவேண்டும்.  இவ்வாறு ஒவ்வொன்றையும் செய்வது பெரிய தொல்லையல்லவா ? இதற்க்கு ஒரு macro எழுதலாம் - பின்வரும் வழிகளை பின்பற்றவும்.

Developer - Macro - Macro Name என்ற பெட்டியில் Upper என்று கொடுக்கவும். (இது உங்கள் விருப்பம்.  எந்த பெயரையும் கொடுக்கலாம்.)


















இப்போது Create என்ற பட்டன் தெரியும்.  அதை தேர்வு செய்தால் CODE விண்டோவிற்கு எடுத்துச் செல்லும்.

Sub Upper()

End Sub 

என்ற இரட்டை வரிகள் தோன்றும்.  இதன் இடையில்தான் நமக்கு வேண்டிய நிரல்களை எழுத வேண்டும்.

நாம் எழுதப்போகும் நிரலில் உள்ள மாறிலிகள் (variable) எந்த வகையான தகவலைக் கொண்டது என்பது முதலில் சொல்லவேண்டும்.  Dim  Cell  as Range என்று முதல் வரியில் கொடுக்கவேண்டும்.  அது எங்கே பயன்படுத்த வேண்டும் என்பவைகளை சொல்வதற்காக For Each Cell in Selection.Cells (இதன் விளக்கம் படிக்கும்போதே புரிந்திருக்கும்). அடுத்த வரியில் செல்லில் இருக்கும் தகவலை எப்படி மாற்றவேண்டும் என்பதை கொடுக்கவேண்டும்.  Cell = Ucase(Cell) என்றும், அடுத்த வரியில் ஒரு செல்லிலிருந்து அடுத்த செல்லிற்கு மாற Next என்றும் கொடுக்க வேண்டும். (Upper() என்பது எக்ஸெல் செயலியாகும்.   VBA ல் UCASE() என்று வரும்.)









CODE WINDOW லிருந்து வெளிவர  FILE -  CLOSE AND RETURN TO MICROSOFT EXCEL என்ற மெனுவை தேர்ந்தெடுக்கவும்.