Total Pageviews

Tuesday, 11 September 2018

TRANSPOSE



எக்செலில் நாம் தயாரித்த தகவலை பத்தியில் இருப்பதை வரிசைக்கும் , வரிசையில் இருப்பதை புத்திக்கும் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.  அம்மாதிரியான நேரத்தில் Transpose என்ற செயலி மிகவும் உபயோகமாக இருக்கும். உதாணரமாக கீழ் இருக்கும் தகவலைப் பார்ப்போம்.












இத் தகவலை பத்தியில் இருப்பதை வரிசைக்கும், வரிசையில் இருப்பதை புத்திக்கும் மாற்ற,   அத் தகவலை தேர்வு செய்து நகலெடுக்கவும். (Ctrl C or Right Click - Copy). பின்பு தேவையான இடத்தில் கர்சரை வைத்து right click - paste special என்பதை தேர்வு செய்யவும் (படத்தினை காண்க)













வரும் உரையாடல் பெட்டியில் உள்ள TRANSPOSE என்ற மெனுவிற்கு பக்கத்தில் உள்ள பெட்டியில் கிளிக் செய்ய்யவும்.  இப்போது நீங்கள் எதிர் பார்த்தமாதிரி தகவல்கள் மாறி இருக்கும். (SHORT CUT KEY:  Ctrl+Alt+V, E  OR  Alt+E+S, E)






இம்மாதிரியான பயன்பாடு சாதாரண தகவல்களுக்கு மட்டும் தான் பயன்படும்.


இந்த தகவல் ஒரு TABLE ஆக இருந்தால் அதை copy செய்து past special மூலமாக பத்தியை வரிசையாக மாற்றுவதோ அல்லது வரிசையில் உள்ள தகவலை பத்தியில் மாற்றுவதோ முடியாது.  அதற்கு பதில் TRANSPOSE என்ற செயலியை array formula வாக பயன்படுத்தவேண்டும்









மேலேயுள்ள டேபிள் A3 லிருந்து D6 வரை இருப்பதாக கொள்வோம்.  இத் தகவல் எங்கு மாற்றி வரவேண்டுமோ அங்கு கர்சரை வைத்து, தேவையான பத்திவரிசைகளை தேர்ந்தெடுத்து  =TRANSPOSE(A3:D6) என்று தட்டச்சு செய்து உடனே Enter Key யை தட்டாமல் Ctrl + Shift + Enter  இந்த மூன்று பட்டன்களை ஒரு சேர தட்டவேண்டும்.  இப்போது நீங்கள் நினைத்த ரிசல்ட் கிடைக்கும்.