Total Pageviews

Monday, 25 June 2018

கேள்வி - பதில் பகுதி - 2


கேள்வி:   நான் எக்செல்லில் பணி  செய்யும்போது விவரங்கள்
                      இல்லாமல் காலியாக விடப்படும் செல்களில் 0 என்ற
                      மதிப்பை கொண்டுவர முடியுமா ?

பதில் :       முடியும்.   முதலில் எக்ஸெல் OPTION ல் கீழ் கண்டவாறு
                       SETTING செய்யவும்.









































































பின்பு கீழ்வரும் MACRO வை ஒரு MODULE லில் இணைத்துக் கொள்ளவும். (முன்பே ஒரு MODULE இருந்தால் அதில் இதை பிழையின்றி தட்டச்சு செய்யவும்.  இல்லையெனில் புதிதாக இணைக்கவும். எப்படி இணைப்பது என்பது கேள்வி - பதில் பகுதி - 1 ல் விவரிக்கப்பட்டுள்ளது.).

Sub fillo()
Dim cell As Range
For Each cell In Selection.Cells
If cell.Value = "" Or cell.Value = " " Then
   cell.Value = 0
   End If
Next
End Sub

---*---


கேள்வி:  எக்செல்லில் பணி செய்யும்போது மேலே  போக PAGE UP 
          KEY யையும் கீழ்  பக்கம் போக PAGE DOWN KEY யையும் 
          உபயோகிக்கிறோம்.  பக்கவாட்டில் இடது பக்கம் போகவும் 
          வலது பக்கம் போகவும் ஏதாகிலும் SHORT CUT உண்டா ?

பதில்:     உண்டே!  
ALT + PAGE DOWN KEY ஐ அழுத்தினால் வலது பக்கமாக ஒரு பக்கம் 
நகர்த்தலாம்.
ALT + PAGE DOWN KEY ஐ அழுத்தினால் இடது  பக்கமாக ஒரு பக்கம் 
நகர்த்தலாம்.

                                                        ---*---







Sunday, 17 June 2018

MACRO - 4




மெசேஜ் பாக்ஸ் மூலம் பயனாளருக்கு எப்படி தகவல் அளிப்பது, தகவலை  ஒரு வரிக்கு மேல் புது வரிகள் அமைத்து கொடுப்பது எப்படி என்பதை பற்றி பார்த்தோம்.  இப்போது மெசேஜ் பாக்ஸ் மூலம் கொடுக்கும் தகவலுக்கு ஒரு விடையை பயனாளரிடமிருந்து எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்.   மெசேஜ் பாக்ஸ் மூலம் வெறும் தகவலை மட்டும் அளிக்கும்போது மெசேஜ் பாக்ஸின் SYNTAX பின்வருமாறு அமையும்.

MSGBOX  "PROMPT "


மெசேஜ் பாக்ஸ் மூலம் ஒரு விடையை பெறும்போது SYNTAX பின்வருமாறு அமையும்

.

MsgBox(prompt[,buttons][,title][,helpfile,context])


இங்கு நாம் கொடுக்கும் தகவல்கள் அத்தனையும் ( ) அடைப்பானுக்குள் அடங்கவேண்டும்.

இதில்

PROMPT:   என்பது பயனாளரிடம் நாம் எதிர்பார்க்கும் தகவல்.  (TEXT STRING).   இது நிச்சயமாக அளித்தேயாக வேண்டும். இத்  தகவல் 1024 எழுத்துக்களுக்கு  மிகாமல் இருக்கவேண்டும்.

BUTTONS :  விடையை கொடுக்க அழுத்த வேண்டிய பட்டன்கள் .  இவைகள் பட்டனின் வகை, அதில் இடம்பெற வேண்டிய ஐகான்கள்.  பட்டன்கள் அமைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை. நாம் எந்த பட்டனையும் தெரிவிக்கவில்லை என்றால் அது DEFAULT ஆக VBOKONLY என்ற பட்டனை எடுத்துக்கொள்ளும்.




பட்டன் வகைகள்






TITLE:  மெசேஜ் பாக்ஸில் (TITLE BAR) தலைப்பில் காட்டப்படவேண்டிய சொற்கள் .



இப்போது முன்பு பயன்படுத்திய உதாரணங்களில் சில மாற்றத்தை ஏற்படுத்தி மெசேஜ் பாக்ஸின்
  உபயோகங்களை பார்ப்போம்.




மேலுள்ள உதாரணத்தில் வண்ணப்பூச்சு உள்ள இடங்களை கவனிக்கவும்.  முதலில் DIM ANS AS INTEGER  என்று உள்ளது.  இது நாம் வாங்கப் போகும் விடையை சேமிப்பதற்க்காக உருவாக்கப்பட்ட ANS  என்ற மாறிலி (VARIABLE ) ஆகும். அந்த மாறிலி எத்தகையது என்பதை INTEGER என்று வரையறுக்கிறோம். INTEGER என்றால் முழுமையான எண்களைத்தான் சேமிக்கும். அதில் வரும் பின்னங்களை (DECIMALS) விட்டுவிடும்.  எண்களின் வரையறைகளை பின்பு பார்ப்போம்.

அடுத்ததாக ANS= MSGBOX("DO YOU WANT TO CONTINUE", VBYESNO, "REPONSE PLEASE") என்று கொடுக்கப்பட்டுள்ளது.  மெசேஜ் பாக்ஸ் மூலம் என்ன விடையை பெருகிறோமோ அது ANS என்ற மாறிலியில் சேர வேண்டும் என்பதால் ANS = என்று கொடுக்கப்பட்டு MSGBOX ம் கொடுக்கப்பட்டுள்ளது.  முதலில் உள்ள MSGBOX  வெறும் தகவலை அளிப்பதால் அதை அடைப்பானில் கொடுக்காமல் வெறுமனே கொடுத்துள்ளோம்.  இதில் தகவலை கொடுத்து ஒரு விடையை பெற வேண்டியுள்ளதால் MSGBOX  CONTENT ஐ அடைப்பானில் கொடுக்கிறோம்.

MSGBOX ( உள்ளே உள்ள "DO YOU WANT TO COTINUE" என்பது பயனாளரிடம் எதிர்பார்க்கும் விடையாகும். (PROMT). இது எழுத்தில் (TEXT)ல் இருப்பதால்." " க்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தாற்போல் வரவேண்டிய பட்டன் எது என்பது VBYESNO என்று கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக MSGBOXன் தலைப்பில் வர வேண்டிய TITLE கொடுக்கப்பட்டுள்ளது.  இதனுடன் ஒரு ஐகானையும் சேர்த்தோமானால் வரக்கூடிய MESSAGE BOX கீழுள்ளதுபோல் தோற்றமளிக்கும்.



MSGBOX("DO YOU WANT TO CONTINUE", VBQUESTION+VBYESNO,
"REPONSE PLEASE")














அடுத்ததாக IF ANS = 7 என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை IF ANS = VBNO என்றும் எழுதலாம் ,

இந்த மெசேஜ் பாக்சில் உள்ள இரண்டு பொத்தான்களுக்கும் தனித்தனியான மதிப்பு உள்ளது. எந்த பொத்தானை அழுத்துகிறோமோ அதற்கு தகுந்தாற்போல் அந்த மதிப்பு ANS என்ற மாறிலியில் சேமிக்கப்படும். எந்தெந்த பட்டனுக்கு  என்னென்ன மதிப்பு என்பதை பட்டியலிடப்பட்டுள்ளன.  















......................