Total Pageviews

Sunday, 11 February 2018

எக்செல்லில் சுலப வழிகள் - 2




எக்செல்லில் சுலப வழிகள் -1 என்ற தலைப்பில் தகவல்களை TABLE ஆக மாற்றுவது எப்படி, அப்படி மாற்றுவதால் என்ன பயன்கள் என்று பார்த்தோம்.

இந்த தலைப்பில் தகவல்களை / சூத்திரங்களை உள்ளீடு செய்யும்போது உபயோகப்படும் சுலப வழிகளைப் பார்ப்போம்.


ஒரு தகவலை ஒரு செல்லில் உள்ளீடு செய்துவிட்டு அம்புக்குறிகளை அழுத்தினால் எந்த அம்புக்குறியை அழுத்துகிறோமோ அந்த திசையை நோக்கி கர்சர் நகரும். ENTER KEY ஐ அழுத்தினால் கர்சர் கீழே செல்லும்.  உள்ளீடு செய்த தகவலை ஏதாவது FORMAT செய்ய வேண்டுமென்றாலோ அல்லது  AUTOFIL  செய்ய வேண்டுமென்றாலோ கர்சரை திரும்பவும் அந்த இடத்துக்கே கொண்டுவந்து வைத்துவிட்டுத்தான் செய்ய முடியும்.  இதை தவிர்க்க உள்ளீடுசெய்தவுடன் CONTROL KEY ஐ அழுத்திக்கொண்டு ENTER KEY ஐ அழுத்தினால் கர்சர் அதே இடத்ததிலேயே இருக்கும் செய்யவேண்டிய  FORMAT /  AUTOFIL ஐ செய்த பின்பு கர்சரை நகர்த்திக் கொள்ளலாம்.

-----

MS WORD ல் மாதிரிக்காக ஏதேனும் உரைநடை (TEXT) தேவையாயிருந்தால்   =RAND(10,5) என்ற செயலியை உபயோகப்படுத்துகிறோம்.  இதில் RAND என்பது செயலியின் பெயர். அடைப்புக்குள் இருக்கும் முதல் எண் எத்தனை பத்திகள் வேண்டும் என்பதாகும்.  இரண்டாவது எண் எத்தனை வாக்கியங்கள் வேண்டும் என்பதாகும்.  மேற்கூறிய உதாரணத்தில் 5 வாக்கியங்களை கொண்ட 10 பத்திகள் உரைநடையாக வேண்டும் என்பதாகும்.

இதேபோல் MS EXCEL லும் தேவையான  செல்களில் மாதிரி தகவல்களை நிரப்ப முடியும்.  எனக்கு D5 செல்லிலிருந்து G20 (D5:G20) வரையிலும் எண்கள் நிரப்பப்பட வேண்டும் .  அந்த எண்களும் 100 லிருந்து 1000 க்குள் இருக்கவேண்டும் என்று கொள்வோம்.  

செல்   D5  லிருந்து  G20   வரை செலக்ட் செய்யவும்.  




பின்பு  =RANDBETWEEN(100,1000) என்று தட்டச்ச்சு செய்து CTRL கீயை  அழுத்திக்கொண்டு   ENTER கீயை அழுத்தவும்.


இப்போது நீங்கள் விரும்பிய செல்களில் விரும்பியவாறு எண்கள் நிரப்பப்பட்டிருக்கும்..  இம்மாதிரியான தகவல்கள் புள்ளியில் துறையில் ரெண்டோம் எண்கள் செலக்ட் செய்யவும் உபயோகப்படும்.

--------

எக்செல்லில் தகவல் உள்ளீடு செய்யும்போது நேரத்தை குறைக்க CONTROL D என்ற சுருக்கு வழி பல வகைகளில் உதவுகிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.  ஒரு WORKSHEET தகவல்களை உள்ளீடாகக் கொடுக்கும்போது ஒரே மாதிரியாக வரும் தகவல்களை CUSTOM LIST ல் சேமித்து வைத்திருந்தால் அதை நாம் உபயோகித்துக் கொள்ளலாம் என்பதை முன்பே பார்த்துள்ளோம்

தொடரும்....