INDEX FUCTION SYNTAX:
INDEX(ARRAY,ROW NO,COL.NO)
இந்த
செயல்பாடு ஒரு குறிப்பிட்ட தரவைக் கண்டறிவதன் (Data
Range) மூலம்
தரவுகளின் வரம்பிலிருந்து ஒரு மதிப்பை எடுத்துக்கொள்கிறது, குறிப்பிட்ட தரவில் குறிப்பிட்ட நெடுவரிசையிலும் குறிப்பிட்ட பத்தியுலும் தேடி விடைகளைக் கண்டுபிடிக்கிறது. .
SYNTAX:
INDEX(ARRAY,ROW NO,COL.NO)
INDEX(தேடப்படவேண்டிய
மதிப்பு உள்ள இடம், தேடப்படவேண்டிய வரிசை, தேடப்படவேண்டிய பத்தி)
1. தேடப்படவேண்டிய
மதிப்பு ஏதோ ஒரு செல்லில் இருக்கலாம் அல்லது ஒரு வரிசையில் (உம் . A2:A10) அல்லது ஒரு பத்தியில் (உம் . B2:B10) ஒரு
செல்லில் இருக்கலாம். அல்லது சில வரிகளும் பத்திகளும் சேர்ந்த ஒரு
அட்டவணைக்குள் (உம் . A2:D10) இருக்கலாம்.
2. தேடப்படவேண்டிய
எண் அல்லது மதிப்பு எந்த வரிசையில் உள்ளது ?
3. கிடைக்க
வேண்டிய மதிப்பு எந்த பத்தியில் உள்ளது ?
உதாரணம்:
ஒரு விடுதியில்
பருவங்களுக்கு (season) தகுந்த
மாதிரியும் எத்தனை நபர்கள் ஒரு அறையில் தங்கக்கூடியது (அறைக்கு தகுந்த மாதிரி) என்பதை பொருத்தும் வாடகை வாங்குகிறார்கள் என்று
கொள்வோம்.
ஒருவர் அறை பதிவு செய்ய விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மூன்று நபர்களுக்கான அறை இரண்டாம் பருவத்தில் தேவையாயுள்ளது. நாள் வாடகை எவ்வளவு ஆகும் என்பதை கண்டுபிடிக்க ....
ROW NO / COL.NO முதலியவைகளை மேலே கண்டுள்ளவாறு ஏதேனும் செல்லில் வைத்திருந்தால் அந்த cell address ஐக் கொடுக்கலாம். இல்லையெனில் நேரடியாக அந்த எண்களை கொடுக்கலாம். மேலே கண்ட syntax ஐ INDEX(C3:F6,2,3) என்றும் கொடுக்கலாம். ஆக INDEX FUNCTION ஐ உபயோகிக்கும்போது விடையை எந்த இடத்தில் தேட வேண்டும், எந்த வரிசை, எந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு தேட வேண்டும் என்பதை உள்ளீடாகக் கொடுக்கவேண்டும்.
விடை இருக்குமிடத்தை தேர்வுசெய்து அதை ஒரு NAMED RANGE ஆகவும் வைத்துக்கொள்ளலாம். ஒரு ரேஞ்சை எப்படி பெயருள்ள ரேஞ்சாக மாற்றுவது. படத்தில் காட்டியவாறு விடைகள் இருக்குமிடத்தை முதலில் தேர்வு செய்யுங்கள். பின்பு NAME BOX ல் ஒரு பெயரை அளியுங்கள். எப்போது வேண்டுமானாலும் அந்த ரேஞ்சை தேர்வு செய்ய அந்த பெயரை அளித்தாலே போதுமானது (பின்வரும் உதாரணத்தில் ரேஞ்சுக்கு RENT என்று பெயரிடப்பட்டுள்ளது.
விடை தேடப்படும் இடம் ஒரே இடத்தில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட இடத்திலும் இருக்கலாம். அப்படி இருந்தால் அதை எப்படி சமாளிப்பது ? வரும் உதாரணத்தை கவனியுங்கள்.
அந்த உரிமையாளருக்கு இரு விடுதிகள் இருப்பதாக்க் கொள்வோம். இரண்டிலும் உள்ள வசதிகளுக்கு தகுந்தமாதிரி வாடகை உள்ளதாகக் கொள்வோம். இரண்டினுடைய வாடகை விவரங்களும் கீழ்வருமாறு அமைந்துள்ளன.
இப்போது RIBBON ல் FORMULA TAB ல் DEFINED NAMES GROUP ல் NAME MANAGER என்ற பட்டனை தேர்ந்தெடுங்கள். NAME
MANAGER ன் உரையாடல் பேட்டி தோன்றும்.
NEW என்பதில் CLICK செய்யவும். இப்போது NEW NAME என்ற உரையாடல் பெட்டி தோன்றும். NAME என்ற பெட்டியில் நாம் உருவாக்கப் போகும் ரேஞ்சிற்கு ஒரு பெயரை அளிக்கவும். (HOTEL என்று பெயர் கொடுத்துள்ளேன்). இப்போது REFERS TO என்ற பெட்டியில் கர்சரை கிளிக் செய்து இரண்டு விடுதியிலும் வாடகை விவரங்கள் இருக்குமிடத்தை தேர்ந்தெடுங்கள். (கீழ் வரும் படத்தில் காண்பித்துள்ளது போல் ) முதலில் விடுதி 1 ல் ஜனவரி முதல் மார்ச் வரை உண்டான வாடகை ஆரம்பிக்கும் இடமான D5 லிருந்து G8 வரை தேர்ந்தெடுத்து காற்புள்ளியை (,) வைக்கவும். பின்பு விடுதி 2 ல் ஜனவரி முதல் மார்ச் வரை உண்டான வாடகை ஆரம்பிக்கும் இடமான D11 லிருந்து G14 வரை தேர்ந்தெடுத்து OK என்ற பட்டனை அழுத்தவும்.
CLICK OK - கீழ் வரும் உரையாடல் பெட்டி தோன்றும்.








