ஒரு எக்ஸெல் செல்லில்
இருக்கும் ஒரு தகவலையோ அல்லது ஒரு FUNCTION
/ FORMULA வை அதன் கீழ் இருக்கும் மற்ற செல்களுக்கோ அல்லது அதன்
வலது பக்கத்தில் செல்லகளுக்கோ நகல் செய்வதில்
பல வழிகள் உள்ளன. இதில் மூன்று வழிகள் உங்களுக்கு முன்பே
தெரியும்.
1. ஒரு
செல்லை CTRL + C மூலம் நகல் செய்து
தேவையான செல்களில் CTRL + V மூலம்
அதை ஒட்டச்செய்வது .
2. ஒரு செல்லை CONTEXT
MENU (RIGHT CLICK) மூலம் நகல் செய்து
(COPY என்ற மெனுவை தேர்ந்தெடுத்து) தேவையான
செல்களில் CONTEXT MENU (RIGHT CLICK) மூலம் ஒட்டச்செய்வது (PASTE).
3. ஒரு
செல்லை HOME TAB ல் உள்ள CLIPBOARD என்ற
GROUP ல் COPY மெனுவை தேர்ந்தெடுத்து தேவையான செல்களில் CLIPBOARD GROUPல் உள்ள
PASTE மூலம் ஓட்டுவது .
4. ஓரு
செல்லில் இருக்கும் தகவலையோ அல்லது FUNCTION / FORMULA வை
நகல் செய்ய விரும்பினால் முதலில் அந்த செல்லை தேர்ந்தெடுக்கவும். அந்த செல்லில் உள்ள கட்டத்தின் வலது
பக்கத்தில் கீழ் பகுதியில் ஒரு சதுரமாக உள்ள இடத்தில் கர்சரை வைத்து எந்த செல்வரை
அதை நகலெடுக்க வேண்டுமோ அதுவரை மவுஸின் இடது பட்டனை அழுத்திக் கொண்டு இழுக்கவும்.
5. ஓரு செல்லில் இருக்கும் தகவலையோ அல்லது FUNCTION / FORMULA வை நகல் செய்ய விரும்பினால் முதலில் அந்த செல்லை தேர்ந்தெடுக்கவும். அந்த செல்லில் உள்ள கட்டத்தின் வலது பக்கத்தில் கீழ் பகுதியில் ஒரு சதுரமாக உள்ள இடத்தில் கர்சரை வைத்து சேர்ந்தாற்போல் இரு தடவை சொடுக்கவும்.
.
7. ஓரு செல்லில் பதிய இருக்கும் தகவலையோ அல்லது FUNCTION / FORMULA வையோ நகல் செய்ய விரும்பினால் அந்த செல்லிலிருந்து
பதிவு செய்ய வேண்டிய செல் வரை தேர்ந்தெடுத்த்து தகவலையோ அல்லது FUNCTION / FORMULA வையோ தட்டச்சு செய்து CTRL + ENTER பொத்தான்களை (BUTTON) அழுத்தவும்.
8. ஓரு செல்லில் இருக்கும் தகவலையோ அல்லது
FUNCTION / FORMULA வை நகல் செய்ய விரும்பினால் முதலில்
அந்த செல்லை தேர்ந்தெடுக்கவும். பின்பு அந்த
செல்லிலிருந்து நகல் செய்யவேண்டிய செல் வரையிலும் SHIFT KEY ஐ அழுத்திக்கொண்டு ê KEY ஐ அழுத்தி தேர்ந்தெடுக்கவும். பின்பு CTRL + D அழுத்தவும்.
9. கடைசியையாக ஓரு முக்கியமான சுலபமான வழியை பார்ப்போமா ?
தகவல் இருக்குமிடத்தில் கர்சரை வைத்து CTRL + SHIFT + * KEYS அழுத்தி மொத்த தகவலையும் தேர்ந்தெடுக்கவும். பின்பு CTRL + T ஐ அழுத்தவும். இப்போது ஒரு உரையாடல் பேட்டி தோன்றும். அதில் தகவலின் RANGE பதிவாகி இருக்கும். அதில் உள்ள OKBUTTON ஐ அழுத்தவும்.
நம்முடைய தகவல் ஒரு TABLE ஆக மாறிவிடும்.
இப்போது Da என்ற பத்தியில் =C2*0.01 என்று தட்டச்சசு செய்து ENTER KEY ஐ அழுத்தவும்.



















