அரசு அலுவலர்களுக்கும் மாணவர்களுக்கும் கணிப்பொறியை கற்றுகொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு வலைப்பதிவு ஆகும்.
Total Pageviews
Wednesday, 30 August 2017
Monday, 28 August 2017
MS EXCEL - FINANCIAL FUNCTIONS (பணப்பயன்பாட்டு செயல்பாடுகள்) – IPMT(), PPMT(), FV() ETC.
ஒவ்வொரு மாத தவணையிலும் எவ்வளவு தொகை வட்டியாக செல்கிறது
என்று தெரிந்துகொள்ள IPMT() என்ற செயல்பாடு உதவும். இதனுடைய SYNTAX =IPMT(RATE OF INTEREST /
12, INSTALMENT NO., TERM, LOAN) என்பதாகும்.(=IMPT(வட்டி விகிதம் / 12, தற்போதைய
தவணை எண், மொத்த தவணைகள் , வாங்கிய கடன் தொகை).
முதல் மாத தவணையில் எவ்வளவு தொகை வட்டியாக சென்றுள்ளது
என்பதை தெரிந்துகொள்ள B7 ல் கர்சரை வைத்துக்கொண்டு =IPMT(B2/12,1,B3,B1) என்று
தட்டச்சு செய்து ENTER KEY ஐ அழுத்தவும். இப்போது அதனுடைய விடை 2833.33 என்று வரும்.
இதையே 30 வது
தவணையில் வட்டியாக சென்றுள்ளது என்பதை தெரிந்துகொள்ள B8
ல் கர்சரை வைத்துக்கொண்டு =IPMT(B2/12,30,B3,B1) என்று தட்டச்சு செய்து ENTER KEY
ஐ அழுத்தவும். இப்போது அதனுடைய விடை 2350.40 என்று வரும்.
ஆக தவணைகள் கூடக் கூட கட்டக்கூடிய வட்டி குறைந்து கொண்டே
போகிறதல்லவா ?
இப்போது மாத மாதம்
தவணை எண்கள் ஏறிக் கொண்டே வரும்போது அசல்
தொகையும் எப்படி படிப்படியாக ஏறிக்கொண்டே
வருகிறது என்பதை பார்ப்போம். ஒரு தவணையில்
அசல்தொகை (principle) எவ்வளவு உள்ளது என்பதை கண்டுபிடிக்க PPMT() என்ற செயல்பாடு (FUNCTION) உள்ளது.
அதனுடைய SYNTAX =PPMT(RATE OF INTEREST / 12, INSTALMENT NO.,
TERM, LOAN) என்பதாகும்.(=PPMT(வட்டி விகிதம் / 12, தற்போதைய
தவணை எண், மொத்த தவணைகள் , வாங்கிய கடன் தொகை)
முதல் மாத தவணையில் எவ்வளவு தொகை அசலாக சென்றுள்ளது என்பதை தெரிந்துகொள்ள B10 ல் கர்சரை வைத்துக்கொண்டு =PPMT(B2/12,1,B3,B1) என்று
தட்டச்சு செய்து ENTER KEY ஐ அழுத்தவும். இப்போது அதனுடைய விடை 2126.09 என்று வரும்.
இதையே 30 வது தவணையில் அசலாக சென்றுள்ளது என்பதை தெரிந்துகொள்ள B11
ல் கர்சரை வைத்துக்கொண்டு =PPMT(B2/12,30,B3,B1) என்று தட்டச்சு செய்து ENTER
KEY ஐ அழுத்தவும். இப்போது அதனுடைய விடை 2609.03 என்று வரும்.
இது வரையில் வட்டித் தொகையும்
அசலும் எப்படி கணக்கிடப்படுகின்றன என்று பார்த்தோமல்லவா? இப்போது தவணைகள் கட்டி வரும்போது
மாதாமாதம் எவ்வளவு தொகை கடனாக மீதம் உள்ளது
என்பதை அறிந்துகொள்வோம். மீதம் உள்ள
தொகையை கண்டுபிடிக்க FV() என்ற செயல்பாடு உள்ளது. இதனுடைய SYNTAX =FV(RATE OF INTEREST / 12, INSTALMENT NO., EMI, LOAN) என்பதாகும். (=FV(வட்டி விகிதம் / 12, தற்போதைய தவணை
எண், மாதந்திர தவணை தொகை, வாங்கிய கடன் தொகை)
=CUMIPMT(B2/12,B3,B1,1,12,0)
முதலில் உள்ளது வட்டி விகிதம், இரண்டாவது மொத்த தவணைகள், மூன்றாவது வாங்கிய கடன் தொகை, நான்காவது தவணையின் ஆரம்பம் எது, ஐந்தாவது எத்தனையாவது தவணை வரையில் வட்டியை கணக்கிடவேண்டும், ஆறாவது வட்டி கணக்கீடு மாத ஆரம்பத்திலா அல்லது மாதம் முடிந்த பிறகா? (மாத முடிவில் என்றால் 0 வையும், மாத ஆரம்பத்தில் என்றால் 1 யும் TYPE ஆக பயன்படுத்த வேண்டும்.) மேலுள்ள உதாரணத்தில் கடன் வாங்கிய 4,00,000 ரூபாய்க்கு ஒரு வருடத்தில் எவ்வளவு வட்டி காட்டியுள்ளோம் என்பதை கண்டுபிடித்துள்ளோம். இதையே இரண்டாவது வருடத்திற்க்கு எவ்வளவு கட்டியுள்ளோம் அல்லது கட்டவேண்டு என்பதைக் காண 13வது மாதத்திலிருந்து 24வது மாதம் வரை =CUMIPMT(B2/12,B3,B1,13,24,0) என்று கொடுக்கப்பட வேண்டும்.
முதல் மாத தவணை கட்டிய பிறகு கடன் தொகை எவ்வளவு உள்ளது
என்பதை தெரிந்துகொள்ள B14 ல் கர்சரை
வைத்துக்கொண்டு =FV(B2/12,1,B4,B1) என்று தட்டச்சு செய்து ENTER KEY
ஐ அழுத்தவும். இப்போது அதனுடைய விடை 3,97,873.91 என்று வரும்.
30வது மாத தவணை கட்டிய பிறகு கடன் தொகை எவ்வளவு
உள்ளது என்பதை தெரிந்துகொள்ள B15 ல்
கர்சரை வைத்துக்கொண்டு =FV(B2/12,30,B4,B1) என்று தட்டச்சு செய்து ENTER
KEY ஐ அழுத்தவும். இப்போது அதனுடைய விடை 3,29,211.56 என்று வரும்.
எப்படி ஒவ்வொரு மாத தவணையிலும் எவ்வளவு வட்டி கட்டியிருக்கிறோம் என்பதை கண்டுபிடிக்க =IPMT() என்ற
செயலி பயன்படுகிறதோ அதேபோல முதல் வருடத்தில் எவ்வளவு வட்டி கட்டியுள்ளோம், இரண்டாவது
வருடத்தில் எவ்வளவு காட்டியுள்ளோம் என்று வருடந்தோறும் வட்டியை கண்டுபிடிக்கவும், ஒரு
குறிப்பிட்ட தருணம் வரையில் எவ்வளவு வட்டி கட்டியுள்ளோம் என்பதை கண்டுபிடிக்கவும் =CUMIPMT() என்ற செயலி பயன்படுகிறது. இதனுடைய syntax
=CUMIPMT(B2/12,B3,B1,1,12,0)
முதலில் உள்ளது வட்டி விகிதம், இரண்டாவது மொத்த தவணைகள், மூன்றாவது வாங்கிய கடன் தொகை, நான்காவது தவணையின் ஆரம்பம் எது, ஐந்தாவது எத்தனையாவது தவணை வரையில் வட்டியை கணக்கிடவேண்டும், ஆறாவது வட்டி கணக்கீடு மாத ஆரம்பத்திலா அல்லது மாதம் முடிந்த பிறகா? (மாத முடிவில் என்றால் 0 வையும், மாத ஆரம்பத்தில் என்றால் 1 யும் TYPE ஆக பயன்படுத்த வேண்டும்.) மேலுள்ள உதாரணத்தில் கடன் வாங்கிய 4,00,000 ரூபாய்க்கு ஒரு வருடத்தில் எவ்வளவு வட்டி காட்டியுள்ளோம் என்பதை கண்டுபிடித்துள்ளோம். இதையே இரண்டாவது வருடத்திற்க்கு எவ்வளவு கட்டியுள்ளோம் அல்லது கட்டவேண்டு என்பதைக் காண 13வது மாதத்திலிருந்து 24வது மாதம் வரை =CUMIPMT(B2/12,B3,B1,13,24,0) என்று கொடுக்கப்பட வேண்டும்.
மொத்தமாக எவ்வளவு தொகையை வட்டியாக காட்டியுள்ளோம் அல்லது கட்ட வேண்டும் என்பதைக் காண என்பதை =CUMIPMT(B2/12,B3,B1,1,120,0) என்று கொடுக்கப்பட வேண்டும்.
எப்படி ஒவ்வொரு மாத தவணையிலும் எவ்வளவு அசல் கட்டியிருக்கிறோம் என்பதை கண்டுபிடிக்க =PPMT() என்ற செயலி பயன்படுகிறதோ அதேபோல முதல் வருடத்தில் மொத்தமாக எவ்வளவு அசல் காட்டியுள்ளோம், இரண்டாவது வருடத்தில் மொத்தமாக எவ்வளவு அசல் கட்டியுள்ளோம் என்று வருடந்தோறும் கட்டிய அசலை கண்டுபிடிக்கவும், ஒரு குறிப்பிட்ட தருணம் வரையில் எவ்வளவு அசல் கட்டியுள்ளோம் என்பதை கண்டுபிடிக்கவும் =CUMPRINC() என்ற செயலி பயன்படுகிறது. இதனுடைய syntax
CUMPRINC(rate, nper, pv, start_period, end_period, type)
CUMPRINC(முதலில் உள்ளது வட்டி விகிதம், இரண்டாவது மொத்த தவணைகள், மூன்றாவது வாங்கிய கடன் தொகை, நான்காவது தவணையின் ஆரம்பம் எது, ஐந்தாவது எத்தனையாவது தவணை வரையில் அசல் கணக்கிடவேண்டும், ஆறாவது அசல் கணக்கீடு மாத ஆரம்பத்திலா அல்லது மாதம் முடிந்த பிறகா? (மாத முடிவில் என்றால் 0 வையும், மாத ஆரம்பத்தில் என்றால் 1 யும் TYPE ஆக பயன்படுத்த வேண்டும்)
ஒரு வருடத்தில் எவ்வளவு அசல் கட்டியிருப்போம் என்பதை கண்டுபிடிக்க மேற்கண்டவாறு பயன்படுத்தவேண்டும்.
இரணடாவது வருடத்தில் எவ்வளவு அசல் கட்டியிருப்போம் என்பதை கண்டுபிடிக்க கீழ்கண்டவாறு கண்டவாறு பயன்படுத்தவேண்டும்.
மொத்தம் எவ்வளவு அசல் காட்டுகிறோம் என்பதை காண
இன்னும் பணப் பயன்பாட்டு (FINANCIAL FUNCTION) செயல்பாடுகள் நிறைய உள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் மேற்கண்ட கார் கடனுக்கு மாதந்திர கடன் நிலை
மாறும் விவர பட்டியல் ஒன்றை தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம். ( AMORTISATION
TABLE ).
தொடரும்....
Saturday, 26 August 2017
MS EXCEL - FINANCIAL FUNCTIONS (பணப்பயன்பாட்டு செயல்பாடுகள்) - 1 PMT()
பலவிதமான பணப்பயன்பாடு செயல்பாடுகளில் (FUNCTIONS) PMT என்ற
செயல்பாடு (FUNCTION) தவணை முறையில் கடன் அடைப்பதற்கு, மாத தவணையை EMI கண்டுபிடிப்பதற்கு
உதவும் செயல்பாடாகும். Equated Monthly Instalment என்பதின் சுருக்கம் EMI என்பதாகும். EMI என்பது முதல் மாத தவணையிலிருந்து
கடைசி மாத தவணை வரையிலும் கட்டக் கூடிய தொகை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே
மாதிரியாக இருக்கும். ஒவ்வொரு மாத தவணையிலும் அந்த மாத வட்டியும் அசலில் ஒரு
பகுதியும் சேர்ந்து இருக்கும். ஒவ்வொரு மாதத் தவணையாக நகரும்போது வட்டித்தொகை
குறைந்து கொண்டே வரும். அசல் தொகை ஏறிக்கொண்டே வரும்.
பொதுவாக எந்த FUNCTION ஐ உபயோகிக்க வேண்டுமோ அந்த FUNCTION
னுடைய SYNTAX தெரிந்தால் நேரடியாக உபயோகிக்கலாம்.
ஒரு FUNCTION ஐ உபயோக்கிக்க அது எந்த தலைப்பின் கீழ் வருமென்று தெரிந்து கொள்ளவேண்டும்.
இதைப்பற்றி FUNCTIONS AND FORMULAS என்ற தலைப்பில் முன்பே தெரிவித்துள்ளேன். அந்த
FUNCTION னுடைய SYNTAX தெரியவில்லை என்றால் என்ன செய்வதென்று பார்ப்போம். உதாரணத்திற்கு
PMT FUNCTION ஐ எப்படி உபயோகிப்பதென்று பார்க்கலாம். முதலில் CELL A1 ல் CAR LOAN
என்றும், B1 ல் 400000 என்றும், A2 ல் INTEREST RATE என்றும், B2 ல் 8.5% என்றும்,
A3 ல் TERM என்றும், B3 ல் 120 என்றும் தட்டச்சு செய்துகொள்ளுங்கள். A4 ல் EMI என்றும்
தட்டச்சு செய்தபின்பு B4 ல் = கர்சரை வைத்து EXCEL ரிப்பனில் FORMULAS என்ற TAB ஐ தேர்தேடுங்கள்.
MS EXCEL 2007 RIBBON
MS EXCEL 2013 RIBBON
இப்போது பலவிதமான
தலைப்புக்கள் தெரியவரும். FORMULAS ஐ
தேர்ந்த்தெடுத்து அதில் FINANCIAL என்பதில் CLICK செய்தால் கீழ்கண்டவாறு மெனுக்கள்
தெரியவரும். அதில் PMT என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
MS EXCEL 2007
MS EXCEL 2013
இப்போது கீழே
காண்பதுபோல் PMT FUNCTION ன் உரையாடல் பெட்டி தோன்றும்.
அதில் RATE என்ற
பெட்டியில் B2/12 என்று தட்டச்சு (B2 வில் வட்டி விகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது
அதில் உள்ளது வருடாந்திர வட்டி விகிதம்.
நாம் கட்டப்போவது மாதத்தவனை ஆகையால் வட்டி விகிதத்தை 12 ஆல் வகுக்கிறோம்.). அடுத்து NPER என்ற
பெட்டியில் B3 என்று தட்டச்சு (இது எத்தனை மாதங்களில் இந்த கடனை திருப்பி கட்டப்போகிறோம்
என்ற தகவலாகும்) செய்யவும். அடுத்து PV என்ற
பெட்டியில் B1 என்று தட்டச்சு (இது தற்போது என்ன மதிப்பு – கடன் வாங்கியது
எவ்வள்ளவு என்ற தகவலாகும்) செய்யவும். அடுத்து உள்ளது FV என்ற பெட்டியாகும். இது
வருங்கால மதிப்பு என்ன என்பதாகும். கடனை
கட்டி முடித்து விட்டால் அதற்க்கு வருங்கால மதிப்பு என்று ஒன்று கிடையாது ஆதலால்
அந்த பெட்டியில் ௦ என்று தட்டச்சு செய்யவும். அடுத்தததாக TYPE என்ற பெட்டியில்
கடன் தவணையை மாதத்தின் முதலிலேயே கட்டுவதாயிருந்தால் 1 என்றும் மாதத்தின்
கடைசியில் கட்டுவதாயிருந்தால் ௦ என்று தட்டச்சு செய்து என்ட்டர் கீயை
அழுத்துங்கள்.
FORMULA BAR ல் SYNTAX
தெரியும் PMT யின் SYNTAX =PMT(RATE OF
INTEREST/12, TERM, LOAN, TYPE, FV). இனிமேல் பார்க்கக்கூடிய செயல்பாடுகளை SYNTAX
மூலமாகவே பார்ப்போம்.
EMI விடையின் இரு
பக்கங்களிலும் அடைப்புக் சிவப்பு குறிகள் உள்ளன. இது வந்துள்ள விடை NEGATIVE வாக
உள்ளது என்பதை குறிக்கும். ஒரு செல்லில் இருக்கும் எண் சிவப்பாகவோ, - குறியுடனோ,
அடைப்புக்குள்ளோ இருந்தால் அந்த எண் NEGATIVE ஆக உள்ளது என்று அர்த்தம். இங்கு இது ஏன் NEGATIVE ஆகா இருக்கிறதென்றால் நாம் வாங்கியது கடன் A1 ல் அதை NEGATIVE ஆக காட்டியிருக்க வேண்டும். அதாவது A1 ல் -400000 என்று போட்டிருக்கவேண்டும். ஒரு
செல்லில் இருப்பது நெகடிவாக இருந்தால் அது எப்படி இருக்கவேண்டும் என்பதை CONTROL
PANEL ல் உள்ள REGION AND LANGUAGE ல் குறித்திருக்க வேண்டும். DATE FORMAT ஐ
எப்படி அமைப்பது, நம்பர் FORMAT களை எப்படி அமைப்பது, CURRENCY FORMAT ஐ எப்படி அமைப்பது
என்பவைகளையும் தனித் தலைப்பில் பார்க்கலாம். இவைகளை FORMAT CELL
என்ற மெனு மூலம் அமைத்தால் எந்த செல்லிற்காக / செல்களுக்காக அமைக்கிறோமோ அவைகளுக்கு
மட்டுமே பயன்படும். ஆனால் CONTROL PANEL மூலமாக அமைத்தால் அந்த கணினியில்
உருவாக்கும் எல்லா எக்ஸ்செல் கோப்புகளுக்கும் பயன்படும்.
BY CHANGING CELL என்ற இடத்தில் B3 CELL தேர்வு
செய்யப்பட்டால் இப்போது தவணை தொகை 6000 மாகவும் மாதத் தவணைகள் 90 ஆகவும் மாறி இருக்கும்.
இந்த கார் கடனுக்கு மொத்தமாக
எவ்வளவு கட்டியிருப்போம். A5 ல் TOTAL PAYMENT என்று தட்டச்சு செய்யவும். B5 ல் =
B3*B4 என்று தட்டச்சு செய்து என்ட்டர் கீயை அழுத்தவும்.
A1 ல் 400000 என்பதை மாற்றினாலோ அல்லது INTEREST RATE ஐ மாற்றினாலோ
அல்லது TERM ஐ மாற்றினாலோ EMI தொகை
தன்னாகவே மாறும். வந்துள்ள EMI
அதிகப்படுத்தியோ அல்லது குறைத்து கட்டுவதாயிருந்தால் எவ்வளவு கடன் கிடைக்கும்
அல்லது தவணை மாதங்கள் எவ்வளவாக இருக்கும்.
இதை காண்பதற்கு ஏதேனும் வழி உண்டா?
ஆம் உள்ளது.
ரிப்பனில் DATA என்ற TAB ஐ கிளிக் செய்யுங்கள். அதில் WHAT-IF ANALYSIS என்ற GROUP ல் GOAL
SEEK என்ற மெனுவை SELECT செய்யுங்கள். கீழே உள்ள மாதிரி திரையில் தெரியும்.
இப்போது GOAL SEEK என்ற உரையாடல் பெட்டியில் SET CELL என்ற
இடத்தில் உள்ள பெட்டியில் எந்த செல்லில் EMI FURNCTION (B4) உள்ளதோ அந்த CELL
ஐ குறிப்பிடவும். அடுத்த பெட்டி TO VALUE என்ற இடத்தில் நம்மால் எவ்வளவு ருபாய்
தவணையாக கட்ட முடியுமோ அந்த தொகையை குறிப்பிடவும். (உதாரணத்திற்கு ருபாய் 6000. அடுத்த
பெட்டி BY CHANGING CELL என்ற இடத்தில் கடன் தொகை எவ்வளவு கிடைக்கும் என்று
தெரிந்துகொள்ள விரும்பினால் கடன் தொகை எந்த செல்லில் (B1) இருக்கிறதோ அதை SELECT
செய்யவும். தவணைகள் எத்தனை மாதங்கள் என்று தெரிய விரும்பினால் தவணைகள் (TERM) எந்த
செல்லில் (B3) இருக்கிறதோ அதை SELECT செய்து OK யில் கிளிக் செய்யவும்..
மேலே உள்ள GOAL SEEK ல் கடன் விவரம் தெரிந்து கொள்வதற்காக B1
CELL தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்போது தவணை தொகை 6000 மாகவும் கடன் தொகை 483926
வும் மாறி இருக்கும். இந்த மாற்றத்தை
விரும்பினால் OK யில் CLICK செய்யவும். இல்லையானால் CANCEL லில் CLIK செய்யவும்.
Subscribe to:
Comments (Atom)


























